வண்ணதாசனுக்கு இயல் விருது!

இலக்கிய உலகில் வழங்கப்படும் முக்கிய விருதுகளில் ஒன்றான ‘இயல் விருது’ இந்த ஆண்டு எழுத்தாளர் வண்ணதாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது.


கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இவ்விருது வழங்கும் விழா ஞாயிறு (10 ஜூன்) மாலை கனடாவில் உள்ள டோரொண்டோவில் நடைபெற்றது.

கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் மூலம் 50 ஆண்டுகளாகத் தமிழ் இலக்கிய உலகில் இயங்கிவரும் வண்ணதாசனுக்குத் தமிழ் இலக்கிய வாழ்நாள் சாதனையான இயல் விருது வழங்கப்பட்டது. விழாவில் பேசிய அவர், “சின்னச் சின்ன விஷயங்கள் என்னை ஈர்க்கின்றன. பிரமாண்டமான நயாகரா அருவியில் நான் கண்டது உயரமாகப் பறந்த சிறிய பறவையைத்தான். நான் சின்னச் சின்ன விஷயங்களால் ஆன மனிதன்” என்றார்.

தண்ணீர் திரைப்படப் புகழ் தீபா மேத்தா, நியூயார்க் ஸ்டோனி புரூக் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிய முனைவர் பாலா சுவாமிநாதன் உள்ளிட்டோர் விழாவின் முதன்மை விருந்தினர்களாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.



புனைவு: வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் - தமிழ்மகன்

அபுனைவு: கனடாவில் இலங்கைத் தமிழரின் வாழ்வும் வளமும் - பேராசிரியர் இ.பாலசுந்தரம்

கவிதை: அம்மை - பா.அகிலன்

மொழிபெயர்ப்பு: பால சரஸ்வதி ; அவர் கலையும் வாழ்வும் - டி.ஐ.அரவிந்தன் (மின்னம்பலம் - நிர்வாக ஆசிரியர்)

ஆங்கில இலக்கியப் பரிசு: அனுக் அருட்பிரகாசம்

சுந்தர ராமசாமி நினைவு கணிமை விருது: சசிகரன் பத்மநாதன்

மாணவர் கட்டுரைப் போட்டி பரிசு: செல்வி சங்கரி விஜேந்திரா

தமிழ் இலக்கிய சிறப்புப் பரிசு: தி.ஞானசேகரன்

தமிழ் இலக்கிய சிறப்புப் பரிசு: கலாநிதி நிக்கோலப்பிள்ளை

கவிஞர் செழியன் நினைவுப் பரிசு: துளசி சிவகுமாரன்

விழாவில் வண்ணதாசனின் ‘அந்தரப்பூ’ கவிதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. பேராசிரியர் சொர்ணவேல் வெளியிட அதை அ.முத்துலிங்கம் பெற்றுக்கொண்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.