யாழ்.நகரில் ரெஜினாவுக்கு நீதி வேண்டிப் போராட்டம்!

யாழ். சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியில் ஆறுவயதுச் சிறுமி பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து யாழில் இன்று வெள்ளிக்கிழமை(29) காலை கவனயீர்ப்புப் போராட்டமொன்று நடாத்தப்பட்டுள்ளது.


மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் மகளிர் அபிவிருத்தி நிலையத் தலைவர் திருமதி- சரோஜா சிவச்சந்திரன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாநகரசபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாநகர சபை உறுப்பினரும், யாழ்.மாவட்ட மகளிர் விவகாரக் குழு சம்மேளனத் தலைவருமான திருமதி- இராமலிங்கம் ராகினி,சாவகச்சேரி பிரதேசசபைத் தவிசாளர் திருமதி- சிவமங்கை, யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கி. கிருஷ்ணமீனன், யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்,அருட்சகோதரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

குறிப்பாக இந்தப் போராட்டத்தில் பல இளைஞர்கள் பங்கெடுத்திருந்தனர்.

இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் , “காட்டுப்புலம் என்ன கால்வைக்க முடியாத பகுதியா?”, ” அரசியல்வாதிகளே மக்களைத் திரும்பிப் பாருங்கள்”,” பாலகியின் புன்சிரிப்பு உனக்குப் போதையா?”, ” போதை ஒழியின் காமம் அடங்கும்”, “ரெஜினாவுக்கு நீதி வேண்டும்”, “மக்களே கசிப்பு உற்பத்தியைக் காட்டிக் கொடுங்கள் உள்ளிட்ட பல்வேறு பதாதைகளைத் தமது கைகளில் தாங்கி எதிர்ப்பில் ஈடுபட்டனர். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.