நிய­ம­னம் வழங்­கப்­ப­டாத தொண்­டர் ஆசி­ரி­யர்­க­ளுக்கு நிய­ம­னம் கிடைக்குமா?

வடக்கு மாகா­ணத்­தில் இது­வரை நிய­ம­னம் வழங்­கப்­ப­டாத 400 க்கும் அதி­க­மான தொண்­டர் ஆசி­ரி­யர்க­ளுக்கு எதிர்­வ­ரும் 5,6 ஆம் திக­தி­க­ளில் நிய­ம­னம் வழங்­கப்­ப­டும் என்று கல்வி இரா­ஜாங்க அமைச்­சர் வே.இரா­தாக்­கி­ருஸ்­ணன் தெரி­வித்­தார்.


வடக்கு மாகாண முத­லைச்­சார், கல்வி இரா­ஜாங்க அமைச்­சர் மற்­றும் மலை­யக மக்­கள் முன்­னணி உறுப்­பி­னர்­க­ளுக்கு இடை­யி­லான கலந்­து­ரை­யா­டல் கைத­டி­யில் நேற்று நடை­பெற்­றது. உரை­ய­டா­லின் பின்­னர் ஊடா­கங்­க­ளுக்­குக் கருத்­துத் தெரி­விக்­கும்­போதே அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

வடக்கு மாகா­ணத்­தில் கல்வி வளர்ச்­சிக்கு கொழும்பு அமைச்­சின் ஊடாக அனைத்து வச­தி­க­ளை­யும் பாட­சா­லை­க­ளுக்­குச் செய்து கொடுப்­பேன். இது தொடர்­பில் மாகாண கல்வி அமைச்­சின் செய­லா­ள­ரு­டன் விரி­வா­கக் கலந்­து­ரை­யாடி உத­வி­க­ளைச் செய்­வோம். தொண்­டர் ஆசி­யர்­கள் பிரச்­சினை நீண்ட கால­மா­கக் காணப்­ப­டு­கின்­றது.

600க்கும் அதி­க­மா­ன­வர்­கள் தெரிவு செய்­யப்­பட்டு அவர்­க­ளில் 182 பேருக்கு நிய­ம­னம் வழங்­கப்­பட்­டுள்­ளது. மிகுதி 400 க்கும் அதி­க­மா­ன­வர்­க­ளுக்கு எதிர்­வ­ரும் 5,6ஆம் திக­தி­க­ளில் நிய­ம­னம் வழங்க அமைச்சு நட­வ­டிக்கை எடுக்­க­வுள்­ளது.

தேசிய பாட­சா­லை­க­ளில் போலி நிய­ம­னங்­கள் பற்­றிக் கூறி­வ­ரு­கின்­றோம். இது­வரை 63 போலி நிய­ம­னங்­கள் இனம் காணப்­பட்­டுள்­ளன. அந்த நிய­ம­னங்­களை ஏற்­றுக்­கொள்ள வேண்­டாம் என்று உரி­ய­வர்­க­ளுக்கு அறி­வித்­து­ளோம். இந்த நிய­ம­னம் தொடர்­பில் சிறப்பு விசா­ர­ணைக்­குழு அமைச்சு மட்­டத்­தில் அமைக்­கப்­பட்­டுள்­ளது – என்­றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.