செ.கஜேந்திரனை சுமந்திரனின் ஆதரவாளர்கள் தாக்க முற்பட்ட பரஸ்பரம்!

அரசிற்கு முண்டுகொடுத்தவாறு மக்களை ஏமாற்றுவதாக கூட்டமைப்பினை விமர்சித் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரனை சுமந்திரனின் ஆதரவாளர்கள் தாக்க முற்பட்டுள்ளனர்.


வடமராட்சி கிழக்கில் அத்துமீறி சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டுள்ள தென்னிலங்கை மீனவர்களை வெளியேற்றக் கோரி யாழ்.கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தை முற்றுகையிட்டு நிர்வாக முடக்கல் போராட்டத்தில் வடமராட்சி கிழக்கு மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர்  கஜேந்திரன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது, தெற்கில் அரசுக்கு முண்டு கொடுத்துக் கொண்டு, வடக்கில் கண்துடைப்பு வேலைகளில் ஈடுபடக் கூடாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை விமர்சித்திருந்தார்.
இதனையடுத்து, சுமந்திரனின் ஆதரவாளர்களர் அவரை தாக்க முற்பட பரஸ்பரம் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

இதனையடுத்து, இரண்டு தரப்பு ஆதரவாளர்களும் அங்கிருந்த மீனவர்களால் சமரசப்படுத்தப்பட்டு தொடர்ந்தும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

போராட்டத்தில் சுமந்திரனின் அழைப்பில் சித்தார்த்தன் மற்றும் வடமாகாணசபை தமிழரசு உறுப்பினர்கள் பங்கெடுத்து இணைந்து கொண்டனர்.

இதனிடையே வடமராட்சி கிழக்கில் அடாத்தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவர்களை வெளியேற்ற சுமந்திரனால் இயலாவிட்டால் அதனை அவர் பகிரங்கமாக கூறவேண்டும். அதன் பின்னர் தென்பகுதி மீனவர்களை நாங்கள் வெளியேற்றுவோமென வடமராட்சி கிழக்கு மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

தென்பகுதி மீனவர்களை எப்படி வெளியேற்றுவதென்பது எங்களுக்கு தெரியும். நாங்கள் அவர்களை வெளியேற்றுவோம்.நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டு தென்பகுதி மீனவர்களை வெளியேற்றுவது தொடர்பாக மத்திய கடற்றொழில் அமைச்சருடன் பேசி தீர்வு காணுவோம் என்றார்கள்.

தென்பகுதி மீனவர்களுக்கு கால அவகாசத்தை வழங்காமல் அவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும். இல்லை அதனை செய்ய தங்களால் இயலாது என்றால் அதனை அவர்; வெளிப்படையாக கூறவேண்டும் என கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர். 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.