கோத்தாவுக்கும்அரசாங்கத்துக்கம் இழுபறி!

இந்த அரசாங்கத்தில் தற்போது பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி கண்டுள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோடாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இன்று கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ போட்டியிட சட்டமூலம் தடையாக உள்ளது என சுட்டிக்காட்டிய கோட்டா, அடுத்த தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியே முடிவு செய்வார் என்றும், அவருக்கே மக்களின் மனநிலை பற்றி தெரியும் எனவும் கூறினார்.

அதுமட்டுமன்றி தற்போதைய அரசாங்கம் தங்களுடைய அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு எதிரானவர்கள் தண்டிக்கவே பெரும்பாலான நேரத்தை செலவு செய்கின்றனர்.

இதனால் நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு எனபன வீழ்ச்சி கண்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அதுமட்டுமன்றி இவ்வாறான செயற்பாட்டையே இந்த அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றதே அன்றி நாட்டை அபிவிருத்தி செய்வது அவர்களது நோக்கமில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

மேலும் தற்போது அடுத்த ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷவையே போட்டியிட வேண்டும் என கூட்டு எதிரணியினர் பலர் விருப்பம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் அவருக்கு மக்களின் ஆதரவு இல்லை எனவும் சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.