கடல் மட்டத்திற்கு கீழ் இருந்தும் வெளிவரும் மனித எலும்புகள்!

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்பு அகழ்வு பணிகள் இன்று 14 ஆவது நாளாக மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இடம் பெற்றது.

குறித்த அகழ்வு பணிகள் இன்றுடன் இடை நிறுத்தப்பட்டுள்ளதோடு, மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை (18) அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்படும் என விசேட சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ அறிவித்துள்ளார்.

அகழ்வு பணிகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.


மன்னார் நீதவான் முன்னிலையில், எனது தலைமையில் இடம் பெற்ற அகழ்வு பணிகளின் போது களனி பல்கலைக்கழக தொல்பொருள் அகழ்வு தொடர்பான கற்கை நெறிகளை பயிலும் மாணவர்களும் பயிற்சி நிலையைச் சேர்ந்த நான்கு வைத்திய அதிகாரிகள் மற்றும் பல் நிபுணத்ததுவ வைத்திய அதிகாரி ஒருவரும் ,

களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா குழுவினருடன் இணைந்து அகழ்வு பணியை மேற்கொண்டு வந்தனர்.

இவர்களுடன் இணைந்து விசேட தடவியல் நிபுணத்துவ பொலிஸார் மற்றும் அழைக்கப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


குறித்த அகழ்வுப் பணிகள் இன்று மதியம் 12 மணியுடன் இடை நிறுத்தப்பட்டது. மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை 18ஆம் திகதி பணிகள் தொடர இருக்கின்றது.

கடந்த 14 தடவைகள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது பல்வேறு மனித எலும்புகள் மீட்கப்பட்டதோடு தடயப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளது.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.