பலாலி விமான நிலைய புனரமைப்புக்கு இந்தியா நிதி உதவி!

யாழ்.பலாலி விமான நிலையம் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் புனரமைப்பு செய்யப்படவுள்ளதாக கூறியிருக்கும்
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அதற்கான ஒப்புதலை பிரதமர் ரணில் விக்கிரம சிங்க வழங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகளுடன் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த இணக்கம் வெளியிடப்பட்டது எனவும் முதலமைச்சர் கூறியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக முதலமைச்சர் மேலும் கூறுகையில்,

1960ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் சென்னை விமான நிலையத்திற்கும், பலாலி விமான நிலையத்திற்கும் இடையில் விமான சேவைகள் நடைபெற்றன. இதனால், விமான நிலையத்தை மீண்டும் அபிவிருத்தி செய்ய இந்தியாவிடம்

முதலில் நானே நிதியுதவியை கோரியிருந்தேன். இதற்காக இந்திய, இலங்கை அரசுகளுக்கு இடையில் இணைப்பு பணிகளையும் மேற்கொள்வதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அண்மையில் பலாலி விமான நிலைய பகுதியை

பார்வையிட்ட இந்திய அதிகாரிகள் அந்த விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய முடியும் என உறுதியை வழங்கியிருந்தனர். பலாலி விமான நிலையம் எந்த வகையிலும் இந்தியாவுக்கு வழங்கப்பட மாட்டாது எனவும், அதன் அபிவிருத்திக்காக மாத்திரம்

இந்தியாவிடம் இருந்து நிதியுதவியை பெற்றுக்கொள்வதாகவும் விக்னேஸ்வரன் கூறியுள்ளார். இதேவேளை பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேரில் வருகைதந்து ஆராயவுள்ளார்.


இதற்காக எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதி பலாலி  வருகைதரவுள்ளார். அலரி மாளிகையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில், பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்துவது

மற்றும் அதற்கு தேவையான காணிகள், அதனை அண்டிய காணிகளை விடுவிப்பது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது. இந்திய தூதுவர் தரன்ஜித் சிங்க் உடன் இணைந்து பலாலி விமான நிலையத்தை பார்வையிட்டு அதனை அபிவிருத்தி செய்வது குறித்த திட்டங்களை

இறுதி செய்வதாகவும் ரணில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உறுதியளித்துள்ளமையும் இங்கே குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.