காவிரி விவகாரத்தில் தீர்வை பெற்று தருவதானால் அதிமுக தான்?

நாகையின் மயிலாடுதுறையில் காவிரி நதிநீர் மீட்பு வெற்றி விழா இன்று நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பழனிசாமி அவர்கள் தெரிவித்ததாவது...


காவிரி நீருக்காக பலர் போராடிய போதிலும் தீர்வை பெற்று தந்தது அதிமுக தான். காவிரி விவகாரத்தில் நடுவர் மன்றம் அமைக்க காரணமாக இருந்தவர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட செய்தவர் ஜெயலலிதா.

காவிரி விவகாரத்தில் நாடாளுமன்றம் செயல்படாமல் ஒத்தி வைக்கும் அளவுக்கு அழுத்தம் கொடுத்தது அதிமுக தான். ஆனால் இந்த விவகாரத்தில் தீர்ப்பு வந்து 2 மாதங்கள் ஆகியும் ஸ்டாலின் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காமல் இருப்பது ஏன்?

திமுக-வின் செயல்படாத தலைவராக இருக்கும் ஸ்டாலின் அதிமுக அரசை செயல்படாத அரசு என விமர்சிப்பது வேடிக்கையாக உள்ளது. தன் இறுதி மூச்சு இருக்கும் வரையில் மக்களுக்காக போராடியவர் ஜெயலலிதா. அதிமுக-வில் என்னைப்போல் பல ஆயிரம் பேர் வருவார்கள், ஸ்டாலினை போல் பல்லாயிரம் பேர் வந்தாலும் அதிமுக-வை அழிக்க முடியாது.

யார் ஆட்சியில் இருந்தாலும் மேட்டூர் அணையில் நீர் இருந்தால் தான் திறந்துவிட முடியும், ஏன் திமுக ஆட்சியில் இருந்தபோது கூட மேட்டூர் அணையில் இருந்து உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படவில்லையே.

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடியாததால் தான் குறுவை தொகுப்பு திட்டம் கொண்டுவரப்பட்டது. குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தமிழக அரசு பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றது.

தனியார் மருத்துவமனையில் கூட செய்ய முடியாத அறுவை சிகிச்சைகளை செய்து தமிழக அரசு மருத்துவமனைகள் தொடர்ந்து சாதனைகள் புரிந்து வருகின்றது. தமிழகத்தில் சிறப்பான சாலைகள் அதிமுக ஆட்சியில் தான் அமைக்கப்பெற்றன. என குறிப்பிட்டு பேசினார்!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.