சென்னை குடிசை இல்லா நகரமாகும்!

சென்னையை குடிசை இல்லா நகரமாக மாற்றுவதே எங்கள் நோக்கம் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


இன்றைய சட்டசபை கூட்டத்தில் குடிசை மாற்று வாரிய வீடுகள் தொடர்பான கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டுவந்த எழும்பூர் தொகுதி எம்எல்ஏ ரவிச்சந்திரன், அது தொடர்பாக கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த துணை முதல்வர் ஓபிஎஸ், ”குடிசைப் பகுதியில் வசித்துவரும் மக்களை குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளுக்கு மாற்றி குடியமர்த்தும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

அதுபோன்று, கூவம் நதிக் கரையில் வசிக்கும் குடிசைப் பகுதி மக்களுக்கு, பெரும்பாக்கத்தில் 20 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுவருகின்றன. அதில் 8 ஆயிரம் வீடுகள் பயனாளிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பள்ளிக்கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் கூடிய இடம் தேர்வு செய்யப்பட்டு, வீடுகள் கட்டுப்பட்டுள்ளன. பராமரிப்பு பணிகளும் அவ்வப்போது மேற்கொள்ளப்படுகின்றன. மத வழிபாட்டுத் தலங்கள் எப்போதும் அரசால் கட்டித்தரப்படாது. அதை அவரவர்கள் கட்டிக்கொள்ள எந்தத் தடையும் இல்லை. சென்னையை குடிசை இல்லா நகரமாக மாற்றுவதே எங்கள் நோக்கம். அதை அரசு நிறைவேற்றிவருகிறது” எனத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.