தமிழர் இயக்கம் ஏற்ப்பாட்டில் ஐ.நாவில் தூத்துக்குடி படுகொலைக்கு நீதிகேட்டு மாநாடு!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 38 வது கூட்டத்தொடர் 18.06.2018 அன்று ஆரம்பித்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில் மனித உரிமை ஆணையாளரின் நேற்றைய உகலளாவிய ரீதியான நாடுகளின் மனித உரிமைகள் நிலைப்பாடுகள் தொடர்பான அறிக்கையின் மேலான (19.06.2018) பொது விவாதத்தின் போது அங்கத்துவ மற்றும் பார்வையாளர் நாடுகளின் விவாவதத்தை தொடர்ந்து, சர்வதேச அரசார்பற்ற நிறுவனங்களிற்கு வழங்கப்பட்ட விவாத நேரத்தில் தமிழர் இயக்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு ஈழத்தில் இடம்பெற்ற தமிழினவழிப்பிற்கும்,தொடர்ச்சியான கட்டமைப்புசார்  தமிழினவழிப்பிற்கும் சர்வதேச நீதி விசாரணை கோரி வாதிட்டிருந்தனர்.

அத்துடன் தமிழினவழிப்பின் தொடர்ச்சியாக தமிழகத்தில் அண்மையில் தூத்துக்குடியில் ஸ்ரெர்லைட் ஆலையை மூடக்கோரி இடம்பெற்ற அமைதிவழிப் போராட்டத்தில் கூட்டுப்படுகொலை செய்யப்பட்ட 13 அப்பாவி பொதுமக்களிற்கும், தமிழ்நாட்டில் மனித உரிமை ஆர்வலர்கள்  குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவதற்கு எதிராகவும் சர்வதேச நீதி விசாரணையை கோரியுமிருந்தனர்.

அத்துடன் தமிழர் இயக்கத்தின் ஏற்பாட்டில் தமிழீழம் உள்ளடங்கிய அங்கீகரிக்கப்படாத தேசங்களை ஒருங்கிணைத்து (TamilEelam, Western Sahara, South Yemaen, Kasmir, Kurdes, Alaska) தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை என்ற தலைப்பில் பக்கவறை நிகழ்வொன்றும் நடாத்தப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.