புதுவையில் தற்கொலை அதிகம்!

இந்தியாவிலேயே புதுச்சேரியில்தான் அதிக தற்கொலை சம்பவங்கள் நடப்பதாக டிஜிபி சுனில்குமார் கவுதம் தெரிவித்துள்ளார்.


புதுச்சேரி மாநிலத்தில், காவல் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை டிஜிபி சுனில்குமார் கவுதம் தொடங்கி வைத்தார். புதுச்சேரி காவல் துறையில் கடந்த பிரெஞ்சு காலத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, கத்தி, வெடிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்கள் கிழக்கு காவல் அலுவலகத்தின் முதல் மாடியில் வைத்து, அருங்காட்சியகமாக இயங்கிவந்தது. இந்த நிலையில், போதிய இடம் இல்லாததால், நிறைய ஆயுதங்கள் பெட்டியில் வைத்துப் பூட்டப்பட்டுக் கிடந்தன.

இதனை பொதுமக்கள் அனைவரும் பார்வையிட வேண்டும் என்பதற்காகப் புதுச்சேரி காவல் துறையின் தலைமை அலுவலகத்தில் தனியாக இடம் ஒதுக்கப்பட்டு, அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. டிஜிபி சுனில்குமார் இந்த அருங்காட்சியகத்தைத் திறந்துவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி, "புதுவையில் தற்போது குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளது. 19 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 36 பேர் மீது குண்டர் சட்டம் பாய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடைபெற இருந்த 4 கொலைகள் தடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே புதுவையில்தான் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆண்டுக்கு 600இல் இருந்து 700 பேர் வரை தற்கொலை செய்து கொள்கின்றனர். இதற்குக் காரணம் சமூக பிரச்சினை. தற்கொலை சம்பவங்களைத் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" என்று கூறினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.