ஜேர்மன் நாட்டவர் கொழும்பில் சமூக செயல்!

இலங்கையில் அதிகம் சுற்றுச் சூழல் மாசடையும் நகரங்களில் ஒன்றாக கொழும்பு காணப்படுவதாக துறைசார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கொழும்பு நகரத்தில் சுற்றுச் சூழல் சுத்தமாக இருப்பது ஓரிண்டு நகரங்கள் மாத்திரமே என தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வாறு மாசடைந்த இடங்களில் ஒன்றான பத்தரமுல்ல, பெலவத்தைக்கு இடையில் உள்ள அக்குரகொட ஏரிக்கு செல்லும் மக்கள் அங்கு குப்பைகளை போட்டு செல்கின்றனர்.

அதனை சுத்தப்படுத்த ஒருவரும் முன்வருவதில்லை. அவ்வாறான மக்களுக்கு மத்தியில், வெளிநாட்டவர் ஒருவர் அனைவரதும் அவதானத்திற்கு உள்ளாகியுள்ளார்.

FAI என்ற ஜேர்மன் நாட்டவர் தொடர்பிலேயே இவ்வாறு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அவர் தான் அக்குரகொட ஏரியில் இலங்கை மக்கள் விட்டு செல்லும் குப்பைகளை சேகரித்து சுற்றுச் சூழலை பாதுகாத்து வருகின்றார்.

பல வருடங்களாக FAI இந்த சேவையை செய்து வருகின்றார். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவரது ஊழியர்கள இணைத்து கொண்டு அவர் செயற்பட்டு வருகின்றார்.

இதனை புகைப்படம் எடுத்த இலங்கையர் ஒருவர் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்

அவர் தினமும் சுற்று சூழலைச் பாதுகாப்போம் என பதாகை ஒன்றை செய்து வைத்தாலும், அந்த பதாகையை உடைத்து அதனை மறைக்கும் வகையில் இலங்கையர்கள் குப்பை போடுகின்றனர். மீண்டும் அந்த பதாகையை அவர் சரி செய்துவிட்டு சுத்தம் செய்து வருகின்றார் என தெரிவிக்கப்படுகின்றது.

சுத்தம் செய்ய பதவி தேடும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் வேறு நாட்டு நபரின் இந்த செயற்பாடு நெகிழ்ச்சியடைய செய்துள்ளதாக புகைப்படங்களை எடுத்தவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.