கதிர்காமம் முழுக்க முழுக்க தமிழ் சித்தர்களின் பூமி.!

*கதிர்காமம் பற்றி அனைவரும் அறிய வேண்டிய அபூர்வ ரகசியங்களை இன்று முழுமையாக பகிர்கிறேன்....... அவசியம் படியுங்கள்... உலகம் அறிய
வேண்டிய உண்மை ரகசியங்கள் இவை....*
*கதிர்காமம் முழுக்க முழுக்க தமிழ் சித்தர்களின் பூமி....*
*சித்தர்கள் பூமி கதிர்காமம்*
************************************
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இலங்கை இந்தியாவுடன் தொடர்பாகவிருந்தது.
ஆந்தக்கால தொட்டு இன்று வரை இந்தியாவுடனான தொடர்பு இருக்கின்றது. இலங்கை சிங்களம் என்று அழைக்கப்பட்ட பிரதேசத்தின் ஒரு சிறு பகுதியே மிகுதி சமுத்திரமாகவுள்ளது என *“அபிதானகோசம்”* என்னும் நிகண்டு குறிப்பிடுகின்றது. இதனை "பாரதி "
*“சிங்களத்தீவினிக்கோர் ஒரு பாலம் அமைப்போம்”* என்னுகுறிப்பிட்டுள்ளார். அக்காலத்திலிருந்து
ஈழவள நாட்டின் தென்பகுதியில் அம்பான்தோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது கதிர்காமம். கதிர் என்றால் சூரியன் என்றும் காமம் என்றால் அன்பு என்றும் இதனால் சூரியனின் அன்பு நிறைந்த இடம் என்று குறிப்பிடுகின்றனர். இன்னும் சிலர் கதிர் என்றால் திணை காமம் என்றால் கிராமம் என்றும் இதனால. *திணை கிராமம்* என்றும் குறிப்பிடுகின்றனர். ஏவை எப்படி இருப்பினும் முருகன் அங்கு இருக்கின்றன்.அவன் அழகன் குறவல்லி மணாளன் தமிழன் குறிஞ்சிக்குமரன். இவற்கெல்லாம் பின்னால் பரிய இரகசியம் ஒன்றுண்டு. பெரும் சித்தன் திருமூலர் *“உண்னுடம்பு ஆலயம்……..* என்னு குறிப்பிட்ட நிலையை அடைந்த சித்தர்களின் பின்னணி அங்கு [உண்டு.
போகமா மகரிசி பழனியில் இறைவணால் பழனி ஆண்டவனை நவபாசாணத்தில் உருவாக்க பணித்தபோது மகரிசி ஐவரை கதிர்காமம் அனுப்பி அவர்களை இங்கு நிஸ்டையில் ஆளும்படி பணித்தார். அப்போது அவர் இங்கிருந்து சக்தியை ஈத்தும் நவகோள்களில் உள்ள பாசாணத்தை ஈத்தும் தான் பழனி முருகனின் திருவுருவை முடித்தார் என்றும்கூறுகின்றனர் முன்னோர். அது மட்டும்மல்ல போகமாமகரிசியும் பல சித்தருடன் வந்தாகவும் அப்போது களைப்பால் பால்குடிக்;க வெளிக்கிட்டபோது அருனகிரிநாதரை கானவில்லை என தேடியபோது போது கிளி வடிவில் வந்த அருனகிரிநாதர் திருப்புகள் பாடியதாகவும் பின் அக்கிளிக் கூட்டை விட்டதாகவும் அதை பின்னர் திருகோணமலையில் உள்ள கன்னியா உற்றுக்கு மேலே உள்ள மலையில் சமாதி வைத்ததாகவும். செவிவழிக்கதையொன்று உண்டு. எது எவ்வாறு இருந்தாலும் சித்தர்கள் வாழ்ததற்கான சான்றாக இருப்பது

தெய்வானை அம்மன் ஆலயத்துக்கு முன்னால் உள்ள குருபீடமும் எட்டு சமாதிகளும் அதன் வரலாற்றை நான் அறிந்த வகையில் பார்போம்.கதிர்காம வரலாற்றில் எல்லோரலும் முத்துலிங்க சுவாமி என அழைக்கப்பட்ட கல்லாணகிரி சுவாமிகள் முக்கியமானவர். மஹரிஷி போகரால்
அனுப்பபட் முத்துலிங்க சுவாமி தனது சக்கியை முழுமையாகப்பயன்படுத்தி ஒரு முருகனின் யந்திரம் வரைந்து அதற்கு சக்தியுட்டி மீண்டும் பழனிக்கு எடுத்துச்செல் விழைந்த போது குறவல்லி தடுத்து அதை கதிர்காமத்தில் வைத்தபோது முருகனால் தடுக்கமுடியாமையினால் எம்பெருமான் அவ்விடத்திலேயே தங்கிவிட்டதாகவும் அவரைக்கானத தெய்வயானை தேடிவந்தபோது சம்பவம் அறிந்து கோவம் கொண்டு முருகனின் கோயிலுக்கு புறமுதுகுகாட்டி இருந்ததாகவும் கதிர்காம சரித்திரம் கூறுகின்றது. தற்போது தெய்வாளை அம்மன் ஆலயம் அப்படித்தான் அமைந்துள்ளது.
இவ்வாலயத்துக்கு முன்னால் குருபீடமும் எட்டு சமாதிகளும் இருக்கின்றது.
இற்றைக்கு இருநூறு வருடங்களுக்கு முன் எல்லோரலும் முத்துலிங்க சுவாமி என அழைக்கப்பட்ட கல்லாணகிரி சுவாமிகள் வடஇந்தியாவில் இருந்து கதிகாமம் நோக்கி வந்தார்.
இவர் முருகப்பெருமானே துணை என இங்கு வந்த தவசிரேஸ்டர் இவர் இங்கு வந்து முருகனின் யந்திரம் வரைந்து அதில் முருகப்பெருமானை அடக்கி தவத்தில் ஈடுபட்டார். ஆவர் உருவாக்கிய யந்திரமே இன்றும் அங்கு இருப்பதுடன் பெரகரவில் யானை மீது வைத்து வலம் வருகின்றனர். கல்லாணகிரி சுவாமிகளின் சமாதி சிவன்கோயிலின்னுள் உள்ளது.
அவரை தொடர்ந்து அவரின் சீடா சுவாமி ஜெயசங்கர் அவரை தொடர்ந்து அவரின் சீடர் சுவாமி ஜெயபால்ஜீ அவரை தொடர்ந்து அவரின் சீடர் சுவாமி ஜெயமால்கிரிஜீ அவர்களுடன் வடஇந்திய இராஜகுமாரி பால சுந்தரி அம்மையாரும். அவரை தொடர்ந்து அவரின் சீடர் சுவாமி ஜெயபால்கரிஜீ அவர்களும் அவரை தொடர்ந்து அவரின் சீடர் சுவாமி மங்களபுரி அவர்களும் அவரை தொடர்ந்து அவரின் சீடர் சுவாமி ஸ்ரீலஸ்ரீ சித்த சுவாமி கேசவபுரிஜீ(பால்குடிபாவா) அவர்களும் அவரை தொடர்ந்து அவரின் சீடர் சுவாமி சந்தோசபுரி அவர்களும் அவரை தொடர்ந்து அவரின் சீடர் சுவாமி இரத்தினபுரி அவரை தொடர்ந்து அவரின் சீடர் சுவாமி சுகதேவ்புரி அவர்களும் அவரை தொடர்ந்து அவரின் சீடர் சுவாமி கிரியானகிரி அவர்களும் நியமிக்கப்பட்டார். இவற்றை நோக்கின்ற போது தவவலிமை பெற்ற மகான்களே தவசிலர்களாக இங்கிருந்து தவம் செய்ததின் விழைவே கதிர்காமத்தின் இனமதபேதமின்றி எல்லோரையும் ஈத்தாழ்கொண்டமைக்கு காரணம். இவர்கள் தவம் புரிந்த இடமும் அவர்கள் அக்கினியை வளர்த்த கோமகுண்டமும் அவர்களின் சமாதிக் கோயிலும் தற்போதும் உண்டு. கோமம் சுவாமி சந்தோபுரி அவர்களின் காலம் வரை நடை பெற்றதாக அறிகின்றோம். இவை அனைத்தும் தெய்வானை அம்மன் கோயிலுக்கு முன் உள்ள குருபீடத்திலேயே அமைந்துள்ளது. தற்போது அதன் பரிபாலனம் இந்தியஇந்துபரிசித் இடமே உள்ளது. ஆங்கு சித்தர்கள் சூட்சும வடிவில் இன்றும் உலாவுகின்றதுடன் தேவைப்படும் போது காட்சியும் கொடுக்கின்றனர். ஆதற்கு நான்அறிந் விடயங்கள் சிலவுண்டு.
இலங்கையில் மட்டக்களப்பைச்சேந்த எனது உறவினரான திரு.K.S.S.நடராஜ அவர்கள் இவர் முன்னாள் ராஜஸ் ஸ்ருடியோ உரிமையாளர் தற்போதைய ராஜபுத்தகசாலை உரிமையாளா திரு N.ஞானச்சந்திரனின் தந்தை கந்தனின் திருவிழா ஆரம்பித்தால் யாத்திரை செல்வது வழமை ஒருமுறை கந்தனை உருகி வழிபட்டுக்கொன்டு கதிர்காமக் கந்தனின் பிரதான ஆலயத்துக்கு முன் நின்று கொண்டிருந்த போது கூப்பிய கரத்தினுள் அம்பும் வில்லும் இருந்தது. இது இப்போதும் இருக்கின்றது.
எனது தாயார் கூறிய கதை யொன்றுண்டு. சிறு வயதில் தனது அம்மா தனது குடும்பத்தாரோடு கதிர்காமம் சென்ற போது சனநெருக்கடியில் தமையனை கானவில்லை. இதனால் தயக்கமுற்ற குடும்பத்தார் தேடியபோது கந்தனை வேண்ட மட்டக்களப்பில் அக்காலத்தில் உலாவிய துருக்கிசாமி போல கோலம் கொண்டு எம்பெருமான் எனது மாமாவை கையில்பிடித்து இழுத்து வந்து அம்மாவிடம் கொடுத்து விட்டு அடுத்தகணமே மறைந்தார்.
மட்டகளப்பிலுள்ள திமிலதீவு மகாவிஷ்ணு கோவிலின் குருக்கள் பெருமதிப்புக்குரிய திரு.பொ.வடிவேல் ஜயா என்னிடம் கதிர்காமக்கந்தனின் திருவிளையாடலை எனக்கு கூறியிருந்தார். ஆவர் கதிர்காமகந்தனிடம் பேரன்பு கொண்டவர். அவர் தனக்கு நேர்த வாழ்க்கைக் கஸ்டங்களை போக்க கந்தனிடம் வேண்டி கதிர்காமம் சென்ற போது மாணிக்க கங்கைக் கரையில் இரவு வேளையில் இருந்போது கங்கைக்குள் ஒளிமிக்ககல் ஒன்றைக்கண்டார். அக்கல்லை எடுத்து தனது மடிக்குள் ஒழித்துவைக்கையில் அதன் பிரகாசத்தை மறைக்முடியவில்லை.இது இப்படி இருக்க மழையும் வந்துவிட்டது.மழைக்கு ஒதுங்கும் போது வயதான சன்னியாசியும் பக்கத்தில் ஒதுங்க இவருக்கு பயம்பிடித்து விட்டது .கல்லை பறிக்க தான் இவர் வந்துள்ளார்;. என அவருடன் வாதிட சன்டை உரக்க சிறிதுநேரத்தில் கல்லையும் கணவில்லை சன்டையிட்டவரையும் கானவில்லை. என்று கூறி மாயையில்மயங்கி மாயனை இழந்தேன்.என்றார். பின்னர் கவலையடைந்த நிலையில் வீடு திரும்பினார். வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது மயில் ஒன்று வந்து தனது வேட்டியை இழுத்து எழுப்ப அங்கு சந்தைப்படுத்தல் தினைக்களத்தின் காரியாலய உதவியாளர் நிற்பதைக்கண்டார். ஆவர் தன்னை உடனடியாக தினைக்களத்தலைவர் வரும்படி கூறினாராம். ஆங்கு சென்ற போது வேலையை பொறுப்பேற்க்கும்படி கேட்டாராம். இதன்மூலம் கிடைத்த வேலையால் தான் தற்போது ஓய்வுதியம் பெறுகின்றேன் என்றார். எனவே *கதிர்காமம் முருகனான சித்தர்கள் நடமாடும்பூமி.*
*கதிர் காமத்தில் வள்ளியம்மன் கோயின் முன்னுள்ள குருபீடத்தில் உள்ள சமாதிகள் பற்றிய விபரங்கள்*
இலக்கம்
*சமாதியில் உள்ள சுவாமியிகளின் பெயர்கள்*
*சமாதியடைந்த ஆண்டு*
*1. Swamy Keshopuri Palkudi Baba 1898*
*2. Swamy Mangalpuri 1873*
*3. Sadhwi Balaswndari 1876*
*4. Swamy Sukhadevapur 1922*
*5. Swamy Sukirthapuri 1933*
*6. Swamy Ganashpuri 1939*
*7. Swamy Raffanpuri*
*8. Swamy nara Yanapuri*
கதிர்காமம் ஆகமமுறைக்குட்பட்ட பூசை நடைபெற்ற இடம். துட்டகைமுனுவின் கைப்பற்றலின் பின் திரையிட்டு மறை பொருளானான் கந்தன். அடியார் உள்ளத்தில் நிறை பொருளானான்'
கதிர்காமத்தில் இன்று நடைபெறுகின்ற பூசை முறை பரம்பரையான முறை என பலரும் கருதலாம். ஆனால் அது வல்ல உண்மை. *தமிழ் மன்னன் எல்லாளன் ஆட்சி துட்டகைமுனுவுக்கு மாறிய பின்னரே* இந்துக்களின் பூசை முறைக்கு கதிர்காமத்தில் ஆபத்துவந்தது.
துட்டகைமுனு ஆட்சிக்கு வந்த பின் கதிர்காமத்திலிருந்த அதிகாரிக்கு எழுதிய ஓலையில் *பன்டாரச் சாதியினர் வந்து இந்து சமய முறைப்படி ஆலய பூசை செய்யும் வரை உங்களுக்கு தெரிந்தவரை பூசை செய்யுங்கள் என எழுதியிருந்ததாகவும் அதை தான் பார்வையிட்டதாகவும் கதிர்காம நாயகா பிக்குவான தம்ம தின்ன பியரத்ன தேரோ* கூறியதாக அறிகின்றோம்.
செஞ்சந்தன கட்டையிலான தங்கத்தட்டால் அங்கி அணிவித்த ஆறுமுகமும் பன்னிருகையும் உள்ள ஆறுமுகசுவாமி சிலை திரைமறைவில் உள்ளது. *1922 ஆம் ஆண்டின் முன் பஸ்நாயக்காவாக இருந்த திரு. ஸ்ரீ உள்விட்ட என்பவரும் கோயிலின் திருப்பணிகள் செய்து கொன்டு 1934 ஆம் ஆண்டுவரை கதிர்காமத்திலிருந்த திரு. புஞ்சி சிங்கோ என்பவரும் கதிர்காம பௌத்த விகாரையின் பிரதம குருவும் சிலை இருந்ததை கூறியிருக்கின்றனர்.* இவர்களின் கூற்றை *1819 ஆம் ஆண்டு அங்கு சென்ற இலங்கையின் தேசாதிபதி பிரவுண்டிரிக் அவர்களுடன் சென்ற டாக்டர்.டேவி என்பவர் எழுதிய வெளியீட்டில் 421 ம் பக்கத்தில் “விக்கிரகம் கோயிலிலிருந்து அகற்றப்பட்டு காட்டில் மறைக்ப்பட்டு வைக்கப்பட்ள்ளது” என்று* குறிப்பிட்டனர். இதிலிருந்து விக்கிரக வழிபாடு இருந்ததற்கான ஆதாரமாக அமைகின்றது.
திருவிழாக்காலங்களில் முருகப் பெருமானது விக்கிரத்திலுள்ள குடை கொடி வெண்சாமரை வேல் வில் அம்பு என்னும் ஆறுசின்னங்களும் வெள்ளிப் பேளையில் வைத்து பட்டுத்துணியில் சுற்றி யானையின் மீது ஏற்றி வலம் வருகின்றனர். இத்துடன் முருகப் பெருமானது சோடன சோபலங்கார பூசைக்கான அடுக்குத்தீபம் பஞ்சதீபம் முக்குதிதீபம் என்பன காட்டபடுகின்றன. அத்துடன் சக்கரைப் பெங்கல் நைவேத்தியமாக நிவேதனம் செய்யப்படுகின்றது. இதிலிருந்து இந்துமத முறைப்படி பூசைகள் நடந்திருப்பதற்கு ஆதாரம் உண்டு.
அத்துடன் *மகாவம்சத்தில் கதிர்காமத்தில் கந்தனுக்கு கோயில் இருந்ததற்கு ஆதாரம் எதுவும் இல்லை. அங்கு தேவநம்பிய தீசன் காலத்தில் கி.பி. 250இல் அசோக சக்கரவத்தியின் புதல்வியான சங்கமித்திரை பிக்குனியால் புத்தகாயவிலிருந்து கெண்டுவரப்பட்ட அரமரக்கிளை ஒன்றினை நாட்டியதாகவும் 1 ம் நூற்றான்டில் கிரிவிகாரையை தகாநாக என்ற அரசன் கட்டுவித்தான் என்றும் கூறிப்பிப்பட்டுள்ளது. இது மகாவம்சம் அத்தியாயம் 57இல, குறிப்பிடப்பட்டுள்ளது.* இது தெடர்பாக *மகாவம்சத்தில்XIII யில் பக்கம் 76-77யில் XLV .45 LVK.2 67,68 ,70,74, உடன்LVIII .5 ம் பிரதிகளிலும்* காணலாம். இங்கு கதிர்காமக்கந்தனின் வரலாறும் இல்லை. இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனால் இவ்வாலயம் அக்காலதிலே இருந்திருக்கின்றது. அக்காலத்தில் இவ்வாலயம் இந்துக்கள் கையில் இருந்திருக்கலாம் என தோன்றுகின்றது. பொளத்தர்களின் கையில் இருந்திருந்தால் மகாவம்சம் அதைக்கூறி இருக்கும் போலும்.
*1635ஆம் ஆண்டு கண்டியை ஆட்சி செய்த கண்ணுச்சாமி என்னும் இரண்டாம் இராஜசிங்கன் என்னும் தமிழ் அரசன் கதிர்காமத்தின் நிர்வாகப் பொறுப்பை பௌத்த குருமாரிடமிருந்து இந்துக்களிடம் ஒப்படைக்க கட்டளையிட அதை அவர்கள் விரும்பாமையினால் அதை கைப்பற்றி இந்துக்களிடம் ஒப்படைத்ததாக* கூறப்படுகின்றது. இதிலிருந்து பார்க்கும் போது காலத்துக்காலம் ஆட்சிப் பொறுப்புக் கேற்ப நிர்வாகப் பொறுப்பும் மாறியுள்ளது என்பது புலனாகின்றது. *1642ஆம் ஆண்டு போத்துக்கேயர் கதிர்காமத்தைக் கைப்பற்ற சென்று ஆலயத்தை அடையாளம் கானாமல் தோல்வியடைந்து* வரும் போது இடையில் கண்ட இந்து கோயில்களை இடித்து தள்ளியும் வழிபட்டு வந்தவர்களை கொன்று குவித்தனர்;. திரும்பியதாக அப் படையின் *தளபதி Gasper Figura de Cerpe) டச் மொழியில்ல்எழுதிய ரிபீரோஸ் சீலாவோ சிலோன்(Ribeiro’s Ceilao Ceylon) என்னும் நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்த டாக்டர் போல் பீரிஸ். சி.சி.எஸ்(Dr.P aule Peris C.C.S.) அவர்கள் அததியாக இருந்த கஸ்பர் பிக்கூரா டி செர்பே (னை பாகம்-1 பக்கம் 324 இல் குறிப்பிட்டுள்ளார். (1597-ல் ‘போத்துக்கீசர் காலம்’)*
*1635 ஆம் ஆண்டிலிருந்து 1817 ஆம் ஆண்டுவரை கதிர்காமம் ஜோதி காமமாக விளங்கியது. 1815ஆம் ஆண்டு கண்டி இராட்சியம் பிரித்தானிய ஏகாதிபத்திய வசக்கப்பட்டு இதனால் “ஊவாகலகம் ஏற்பட்டது” இதன் விழைவாக 1818ஆம் ஆண்டு கலகம் வலுவடைந்து 1819 ஆம் ஆண்டு கட்டுபடபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு 1819 ஆம் ஆண்டு யில் கதிர்காமம் இந்துக்கள் வசமானது.* பாதுகாப்புப் பொறுப்பு பிருத்தானிய படை வசம்மிருந்தது. அப்போது தெய்வானை அம்மன் ஆலயப் பொறுப்பு ஸ்ரீ கல்யாண கிரிபாவா விடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் காட்டியில் மறைத்து வைக்கப்படடிருந்த ஆறுமுகசாமி எடுக்ப்பட்டு கதிகாம கந்தனின் கருவறையில் வைக்கப்பட்தாக *தேசாதிபதி பிரவுண்டிரிக் உடன் சென்ற டக்டர் டேவி 1821ஆம் ஆண்டில் பிரசுரிக்ப்பட்ட அரசாங்க பத்திரிகையில்* எழுதி வெளியிட்டார். *1865ஆம் ஆண்டுவரை கதிர்காம நிர்வாகம் இந்துக்கள வசமாயி;ருந்தது என்பதற்கு பதுளை நீதி மன்றத்தில் பதிவான1865ஆம் ஆண்டு 182ஆம் இலக்க வழக்கு உறுதி செய்கின்றது.*
*1834ஆம் ஆண்டு வெளியான அரச வர்தமான பத்திரிகையில் சைமன் காசிச் செட்டி என்பவர் கதிர்காமத்துக்கு இந்தியாவிலிருந்து வரும் யாத்திரியர்கள் கங்கா ஜலத்தை மூங்கில் குழாய்களில் அடைத்து வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து ஆராதனை செய்ததாகவும் முஸ்லிம் பக்கீர்கள் சுவாமியின் முன் தீவர்த்தி கைப்பந்தம் பிடித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேல் குறிப்பிடப்பட்ட விடயங்களை ஓப்பு நோக்கும் போது இந்து தர்மத்தில் உள்ள அபிஷேகம் அர்ச்சனை ஆராதனைகள் அனைத்தையும் நடாத்தப்பட்டுள்ளது என்பது புலனாகின்றது. இருந்தும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் காரணமிருக்கும் அவை வெளிப்படையாக தெரிவதும் உண்டு. உள்ளுனர்வால் உணர்வதும் உண்டு. எவை எப்படி இருப்பினும் *கதிர்காமம் சித்தர் கோயில்.* சித்தம் தெளிதால் அவன் ஒளி தெரியும். அதற்கு அகஇருள் நீங்க வேண்டும். உள்ளம் இருண்டால் அகக் கதவு மூடிவிடும்;. இதை *திருமூலர் திருமந்திரத்தில் “உள்ளம் பெரும் கோயில் ஊன் உடம்பு ஆலயம்”* குறிப்பிடுகின்றார். சித்தர்கள் மகரிசிகள் மரபு புறக்கண்னால் கண்பதற்கு பதில் அகக்கண்னால் காண்பது. அதாவது தியானத்தின் மூலம் எம்முள்ளுள்ள இறைவனை காண்பது. இதனால் சாதி மத இன நிற வேறுபாடுகள் அதிகரிதிருந்ததால் ஆணவம் மேலோங்கி கந்தன் மறைந்தான். உண்மை அடியார்களான எழியோர்க்கு அகஒளிலில் தன்ஒளிபரப்பவே கந்தன் மறைந்து உண்மை அடியார்யுள்ளத்தில் குடிகொண்டுள்ளான். என்பதே உண்மை. கதிர்காமத்தில் கந்தன் அடியார்ரோடு அடியாராய் எழியோனாய் நடமாடுபவன். அங்கு தன்னைநோக்கி உருகுபவருக்கு காட்சி கொடுப்பவன். அருனகிரிநாதர் “திருப்புகழில்” கதிர்காமகந்தன் திருவளையாடலை *“மருவும்மடியாரிகள் மனதில் விளையாடும் மரகத மயுர பெருமாளே”* என குறிப்பிடுகின்றார்.
கதிகாமத்தில் சித்தானைக்குட்டி சுவாமிகளுக்கு கந்தனின் அமுததுளிகிடைத்தது. இவர் தென் இந்தியாவின் தென் பகுதியான இராமநாதர்புரம் “பெருநாளி” என்னும் இராசதானி சிற்றலசரின் ஒரே மகன் கோவிந்தசாமி என்பவராகும். இவர் ஒருமுறை கதிர்காமக்கந்தனின் அருள்வேண்டி மாணிக்ககங்கையில் நீடாடி மாணிக்கப்பிள்ளையாரிடம் உண்ணநோம்பிருந்தார். அது தவமாகமாறி பல வாரம் கழிந்தது கந்தன் கைவிடவில்லை. ஒருநாள் பெரிய கப்புறாளை வந்து சுவாமியிடம் “உன் தந்தை உள்ளே வருமாறு அழைக்கின்றார்.” என்று கோயிலினுள் அழைத்துக் சென்றார். சுவாமி உட் புகுந்ததும் சுரங்வழியாக ஏழுமலையை அடைந்து அதிலுள்ள சுனையிலிருந்து கையினால் நீர் எடுத்து மூன்று செட்டு நீ நாவிலிட்டார். இதன் பின் உண்ணா நோம்பின் களை “சூரியனில் பட்ட பனிபோல் மறைந்தது” அந்த சந்தாப்பத்தை சுவாமி உணவின்றி பலநாட்கள் இருந்தாலும் உடலில் எவ்வித மாற்றமும் இருக்காது அதன் இரகசியத்தை கேட்கும் போது ஒருமுறை குறிப்பிட்டாராம். நீர் அருந்தியபின் கண்களை மூட்ப் பணித்தாரம் பின் கண் திறக்கையில் சுவாமி கதிர்காம வீதியில் நடமாடுவதை உணர்தாராம். இப்படிப்பட்டவன் கந்தன்.
*அவன் திருவிளையாடல்களை “சித்தர்கள்; பூமி கதிர்காமம்”* என்னும் கட்டுரையில் குறித்துரைத்துள்ளேன். கதிர்காமம் சித்தர்கள் பூமி ஆகையால் சித்தர்கள் கந்தனை தன்னுள் கண்டவர்கள். அஞ்ஞானத்தாலும் ஊனக்கண்ணுக்கும் தெரியாதவன் கந்தன். ஞானத்துக்கும் அககண்ணுக்கும் புலப்படுவான் அவன். அதனாலோ கந்தன் மறைபொருள்ளானான். என எண்ணத் தோன்றுகின்றது
*இந்த முழு தகவல்களையும் ஆதார பூர்வமாக அனுபவமாக திரட்டி ஆய்வுக்காக தந்த என் பாடசாலை ஆசான் மாபெரும் சித்த உபாசகர் குமரகுரு ஆசிரியர் அவர்களையே போய் சேரும்.........*
- *சித்தர்களின் குரல் shiva shangar*

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.