யாழ் தனியார் பேருந்து சேவை கம்பனியில் பாரிய காசோலை மோசடி!

யாழ்ப்பாணத்திலிருந்து தூர இடங்களுக்கு சேவையாற்றும் தனியார் பேருந்து சங்கத்தில் பாரிய காசோலை மோசடி ஒன்று இடம்பெற்றுள்ளது.



கடந்த மாதம் மேற்படி சங்கத்தின் தலைவர் பிருந்தா கண்ணன் என்று அழைக்கப்படும் சிவராசா சிவபரன், என்பவர் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியா காசேலையை நிர்வாகாத்தினருக்கும் பொருளாளருக்கும் தெரியாதவண்ணம் முகாமையாளரின் உதவியுடன் திருடியுள்ளார் . சங்க விதியின்படி நிர்வாக சபை கூடி தீர்மானம் நிறைவேற்றிய பின்னரே பொருளாளரின் கையொப்பத்துடனேயே காசோலை பரிமாறவேண்டும் ஆனால் யாருக்கும் தெரியாதவண்ணம் முகாமையாளர் எழுதிக்கொடுக்க தலைவர் பெற்று வேறு வங்கி ஒன்றில் மாற்றியுள்ளார்

ஒரு மாதங்களின் பின்னர் பொருளாளரின் கணக்காய்வின்போதே காசோலை புத்தகம் பார்வையிடப்பட்டபோது மேற்படி மோசடி பிடிபட்டுள்ளது முகாமையாளரைக்கேட்டபோது உபதலைவர் ஆனந்தன் கொடுக்கச்சொன்னார் நான் கொடுத்தேன் என்று கூறியுள்ளார்

உரிமையாளகளின் மத்தியில் சர்ச்சை ஏற்பட்டதும் முகாமையாளர் தலைவர் செய்த மோசடியை இலங்கை வங்கி இரண்டாவது கிளைக்கு கடிதமூலம் சமர்ப்பித்துள்ளார் இதன் அடிப்படையில் வங்கி முகாமையாளரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன , இதில் யார் குற்றவாளி என்பதே கேள்விக்குறியாக உள்ளது தலைவரின் மாமனாரான தமிழரசுக்கட்சியின் வலிவடக்கு பிரதேச சபை உறுப்பினரான தங்கராஜா என்பவரே மேற்படி சங்கத்தின் முகாமையாளராவார் என்பதும் குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.