இரண்டு வாரங்களுக்குள் ஆவா குழு அழிக்கப்படும்! -

யாழ்ப்பாணத்தில் செயற்படும் ஆவா குழுவை
இரு வாரங்களுக்கு முழுமையாக இல்லாமல செய்வதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
யாழ். குடாநாட்டு மக்களிடம் இருந்து கிடைக்கும் முறைப்பாடு மற்றும், மக்கள் வாழ்க்கைக்கு ஏற்படும் அழுத்தம் அதிகரிப்பு காரணமாக இந்த குழுக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. 100 பொலிஸாரை கொண்ட விசேட பொலிஸ் குழுவொன்று கடந்த 5ஆம் திகதியில் இருந்து விசேட சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. யாழ்ப்பாணத்தின் அனைத்து பொலிஸ் அதிகாரிகளினதும், விடுமுறை இரத்து செய்யப்பட்ள்ளது. விசேடமாக ஆவா குழுவினர் சுற்றித் திரியும் 4 பொலிஸ் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதற்கமைய அந்த பிரிவுகளான, யாழ்ப்பாணம், சுன்னாகமம், மானிப்பாய் மற்றும் கோப்பாய் ஆகிய பகுதிகளில் பொலிஸார் விசேட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
விசேட பொலிஸ் குழுக்கள் பிரதேசத்தின் பாதுகாப்பு செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள நிலையில், ஆவா குழுவென சந்தேகிக்கின்றவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.