தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதா தாக்கல்!

தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதாவை மீன்வளத்துறை அமைச்சர்
ஜெயக்குமார் இன்று தாக்கல் செய்தார்.
இந்தியாவில் அரசு துறைகளில் நடக்கும் ஊழல்களை விசாரிக்கும் வகையில் கடந்த 2013-ம் ஆண்டு லோக்பால், லோக் ஆயுக்தா சட்டம் உருவாக்கப்பட்டது. இந்த சட்டம் 2014, ஜனவரி 16 முதல் அமலுக்கு வந்தது.
தற்போது ஆந்திரா, கேரளா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட 17 மாநிலங்களில் லோக் ஆயுக்தா இயங்கி வருகிறது. ஆனால் தமிழகம், தெலங்கானா, மேற்கு வங்கம், ஒடிஷா, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள் இன்னும் லோக் ஆயுக்தா சட்டத்தை இயற்றவில்லை.
இந்நிலையில், லோக் ஆயுக்தா அமைக்க வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் லோக் ஆயுக்தா அமைக்கும் பணியை, தமிழக அரசு உடனடியாக துவங்க வேண்டும் என்றும், இது தொடர்பான அறிக்கையை, ஜூலை, 10க்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. 

 இந்நிலையில், உச்சநீதிமன்றம் விதித்த கெடு நாளையுடன் முடிவடையும் நிலையில், லோக் ஆயுக்தா மசோதாவை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்துள்ளார்.
தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. எனவே, நடப்பு கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று அனைத்து கட்சிகளின் முழு ஆதரவோடு லோக் மசோதா நிறைவேற்றப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதனிடையே பொதுமக்களின் கருத்தை கேட்காமல் லோக் ஆயுக்தா மசோதாவை நிறைவேற்றக்கூடாது என்று தலைமை செயலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டஅறப்போர் இயக்கத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர். 
 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.