தொடரும் கால அவகாசம்!

ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க அடுத்தாண்டு மார்ச் 31 வரை கால அவகாசம் நீட்டித்துள்ளது மத்திய அரசு.


மத்திய நிதித்துறை மந்திரி அருண் ஜேட்லி, கடந்த 2017-18இல் கொண்டுவந்த திருத்தத்தின்படி, வருமான வரிக்கணக்குத் தாக்கல் செய்யும்போது, ஆதார் எண்ணைக் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், ஒரே நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளை வைத்து, வரி ஏய்ப்பு செய்வதைத் தடுப்பது நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டது. எனவே, பான் எண் வைத்திருப்போர் அனைவரும், தங்கள் ஆதார் எண்ணை அதனுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய வருவாய்த் துறை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஆதார் அட்டைக்கு சட்டபூர்வமான அங்கீகாரம் உள்ளதா என்பது தொடர்பான பல வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன.

முன்னதாக பான் கார்டுடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசம் 2017 ஜூலை 31 வரை வழங்கப்பட்டது. பின் அது ஆகஸ்ட் 31 வரையிலும் அதன்பின் டிசம்பர் 31 வரையிலும் தொடர்ந்து இந்தாண்டு மார்ச் 31 வரை என நான்கு முறை நீட்டிக்கப்பட்டிருந்தது. கடைசியாக 30-6-2018 வரை தேதி நீட்டிப்பு செய்யப்பட்டிருந்தது. இந்தக் காலக்கெடு நேற்றுடன் முடிந்தது. இந்த நிலையில் மீண்டும் அடுத்தாண்டு மார்ச் 31ஆம் தேதி (31-3-2019) வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.