காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­கள் பணியகத்தை கண்காணிக்க பன்னாட்டுக் குழு அவசியம்

பல­வந்­த­மா­கக் காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் தொடர்­பான பணிய­கம் (ஓ.எம்.பி.) முன்­னெ­டுக்­கும் செயற்­பா­டு­க­ளைக் கண்­கா­ணிப்­ப­தற்கு பன்­னாட்­டுப் பிர தி­நி­தி­களை உள்­ள­டக்­கிய கண்­கா­ணிப்­புக் குழு ஒன்று கட்­டா­யம் அமைக் கப்­ப­ட­வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்­றன யாழ். மாவட்­டத்­தைச் சேர்ந்த பொது அமைப்­பு­கள்.

ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் சபை­யில் இலங்கை தொடர்­பில் நிறை வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்­தின் அடிப்­ப­டை­யில் நாடா­ளு­மன்­றத்­தில் சட்­ட மி­யற்­றப்­பட்டு இந்­தப் பணி­ய­கம் அர­சால் உரு­வாக்­கப்­பட்­டது. எனி­னும் இந்­தப் பணி­ய­கத்­தின் மீது தமக்கு நம்­பிக்­கை­யில்லை என்று காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வி­னர்­க­ளில் பெரும்­பா­லா­ன­வர்­கள் தெரி­வித்து வரு­கின்­ற­னர். இருப்­பி­னும் பணி­ய­கம் தனது செயற்­பா­டு­களை ஆரம்­பித்­துள்­ளது.

இந்த நிலை­யில் பணி­ய­கத்­தின் செயற்­பா­டு­க­ளைக் கண்­கா­ணிப்­ப­தற்­கான பன்­னாட்­டுக் குழு ஒன்று அமைக்­கப்­ப­ட­வேண்­டும் என்ற கோரிக்­கை­யைப் பொது அமைப்­பு­கள் நேற்று முன்­வைத்­தன. யாழ்ப்­பாண அரச சார்­பற்ற நிறு­வ­னங்­க­ளின் இணை­யத்­தில் நேற்று நடந்த கலந்­து­ரை­யா­ட­லில் இந்­தக் கோரிக்கை வலி­யு­றுத்­தப்­பட்­டது.

இணை­யத்­தின் தலை­வர் தே.தேவா­னந்த் தலை­மை­யில் நடந்த இந்­தக் கலந்­து­ரை­யா­ட­லில் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­க­ளின் செயற்­பாட்­டா­ளர்­கள், பொது அமைப்­பு­க­ளின் பிர­தி­நி­தி­கள், காணா­மற்­போ­னோர் தொடர்­பில் பணி­யாற்­றும் தன்­னார்வ நிறு­வ­னங்­க­ளின் பிர­தி­நி­தி­கள் எனப் பலர் கலந்­து­கொண்­ட­னர்.

காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் விட­யத்­தில் அதற்­கான பணி­ய­கம் அமைக்­கப்­பட்­டமை முன்­னேற்­ற­க­ர­மா­ன­து­தான் என்­ற­போ­தும் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எதிர்­பார்ப்­புக்கு அமை­வாக அதன் செயற்­பா­டு­கள் அமை­ய­வில்லை.

பணி­ய­கம் நடத்­தும் அமர்­வு­க­ளில் உற­வி­னர்­கள் தெரி­விக்­கும் கருத்­துக்­களை பணி­ய­கத்­தின் ஆணை­யா­ளர்­கள் செவி­ம­டுப்­ப­தில்லை.

காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­கள் தொடர்­பில் உண்­மை­யைக் கண்­ட­றி­வ­தோடு நின்­று­வி­டா­மல் அதற்­கான நீதி­யை­யும் வழங்­கக்­கூ­டி­ய­தா­கப் பணி­ய­கம் மாற்­றி­ய­மைக்­கப்­ப­ட­வேண்­டும்.
பணி­ய­கத்­திற்கு ஒரு சட்ட அதி­கா­ரம் இல்­லா­மல் இருப்­பது உற­வு­கள் மத்­தி­யில் நம்­பிக்­கை­யீ­னத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றது.

பணி­ய­கத்­தின் ஆணை­யா­ளர்­கள் மற்­றும் அதி­கா­ரி­க­ளில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கா­கப் பணி­யாற்­றும் அமைப்­பு­க­ளின் பிர­தி­நி­தி­கள் உள்­வாங்­கப்­ப­ட­வேண்­டும்.

பணி­ய­கத்­தின் பணி இழப்­பீடு வழங்­கு­வ­தோடு நின்­று­வி­டா­மல் காணா­மற்­போ­ன­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­ப­தைத் தெளி­வு­ப­டுத்­து­வ­தாக அமை­ய­வேண்­டும். குறிப்­பாக அவர்­கள் உயி­ரு­டன் இருக்­கி­றார்­களா இல்­லையா? இல்லை என்­றார் அவர்­க­ளுக்கு எப்­போது, யாரால், என்ன நடந்­தது? ஆகிய கேள்­வி­க­ளுக்கு விடை கிடைக்­க­வேண்­டும்.

ஆகிய முக்­கிய விட­யங்­கள் கலந்­து­ரை­யா­ட­லில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டன. இந்­தக் கூட்­டத்­தில் சுட்­டிக்­காட்­டப்­பட்ட விட­யங்­கள், தீர்­மா­னங்­கள் தொடர்­பில் அறிக்கை ஒன்­றைத் தயா­ரித்து அத­னைப் பணி­ய­கத்­திற்­கும் ஐக்­கிய நாடு­கள் சபைக்­கும் இந்த விட­யத்­தில் அக்­க­றை­யுள்ள தொண்டு அமைப்­பு­க­ளுக்­கும் அனுப்பி வைப்­பது என்­றும் கூட்­டத்­தில் முடிவு செய்­யப்­பட்­டது.

‘‘காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­கள் மற்­றும் காணா­மற்­போ­னோர் தொடர்­பான விட­யங்­க­ளில் இந்­தக் கூட்­டம் ஒரு தொடக்­கம் மட்­டுமே! இதில் அக்­க­றை­யுள்ள அமைப்­பு­க­ளை­யும் பொது அமைப்­புக்­க­ளை­யும் அழைத்து மேலும் பல கலந்­து­ரை­யா­டல்­க­ளைத் தொடர்ந்து நடத்­து­வ­தன் மூலம் இந்த விட­யத்­தில் நீதி­யும் நியா­ய­மும் வழங்­கப்­ப­டு­வதை உறு­திப்­ப­டுத்­த­வும் தலை­யீ­டு­க­ளற்ற வகை­யில் உண்மை வெளிக்­கொ­ண­ரப்­ப­ட­வும் தொடர்ச்­சி­யான அழுத்­தங்­களை வழங்­க­வேண்­டிய தேவை எழுந்­துள்­ளது’’ என்று யாழ். மாவட்ட அரச சார்­பற்ற நிறு­வ­னங்­க­ளின் இணை­யத் தலை­வர் தே.தேவா­னந்த உத­யன் பத்­தி­ரி­கை­யி­டம் தெரி­வித்­தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.