பாலியல் தொந்தரவு தொலைபேசி அழைப்புகள் கண்காணிப்பு!

பாலியல் தொந்தரவு அளிக்கும் அடையாளம் தெரியாத தொலைபேசி அழைப்புகளை கண்காணிக்குமாறு சைபர் கிரைம் போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தனியார் கம்பெனியின் உயர் அதிகாரி ஒருவா் தொடர்ந்த வழக்கு ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ( 3.8.2018) அன்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கு மனுவில், தனியார் கம்பெனியின் உயர் அதிகாரி கூறுகையில், கம்பெனியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஒரு ஊழியர் தனது மனைவி மற்றும் அவரது தங்கையின் தொலைபேசி எண்களை டேட்டிங் இணைய தளத்தில் ஏற்றிவிட்டார். இதனால் இரவு பகல் பாராது தனது மனைவியையும் அவரது தங்கையையும் பாலுறவுக்கு அழைப்பு விடுத்து அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து அழைப்புகளும், வாட்ஸ்அப் அழைப்புகளும் வருவதாகவும் அதனால் பாதிக்கப்பட்ட தனது மனைவியும் அவரது தங்கையும் மிகுந்த மன உளைச்சலுக்குள்ளாகி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

வழக்கினை விசாரித்த நீதிபதி பிஎன்.பிரகாஷ் இவ்வழக்கை விசாரித்து குற்றவாளியைக் கண்டுபிடிக்குமாறு சைபர் கிரைம் ஆய்வாளருக்கு உத்தரவிட்டார்.

முன்னதாக மனுதாரரான தனியார் கம்பெனியின் உயர் அதிகாரி கடந்த ஜீன் 21ஆம் தேதியன்றே போலீசாரிடம் மனு அளித்ததாகவும் ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் நீதிமன்றத்தில் முறையிட்டார். அதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர் புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தீவிரமாக விசாரித்துவருவதாகவும் தெரிவித்தார்.

#india   #india_Tamil_news    #Tamil_news    #Rape_Telephone #Contorel

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.