நிராகரிப்பு...!!!

என்றோ ஒரு நாள்
உன்னை சந்திக்க
நேர்ந்தால் என்னிடம்
மன்னிப்புகளும் உன்னிடம்
நிராகரிப்புக்கான பெருந்தன்மை
உள்ள உள்ளமும் இருக்கலாம்...


இத்தனை நாளும் இறுகிய
களி மண்ணுக்குள் புதைந்திருந்தாற்
போல் கிடந்த தாழ்கள் திறந்து
கசிந்தொழுகி புதிய தடம் மலராம்...

அன்பெனும் கனியை பறிக்க
எத்தனித்த என் கண்கள் .
ஏமாற்ற கிளையில் சிக்கியதை பிரதி செய்து
விழிநீர் சிந்த தடுமாற்றம் அடைந்து
உன் கைகள் துடைக்க எத்தனிக்கலாம்,.


அலைமோதும் கீற்றாய் உன்
அன்பிற்காய் அலைந்து அலைந்து
அடங்கிய மனதின்அடுக்குகள்
அன்பின் அரவணைப்பில் களிம்பு
பூசத்தவிக்கலாம்...


அன்று நீ குழைத்து ஊட்டிவிட்ட
செழுந்தேனான வார்த்தைகள்
ஆழ் மனதில் கிடந்து மெல்ல
மெல்ல மேலெலுந்து உன் அகத்தினை
தொட முயற்ச்சிக்கலாம்.


யூகங்களும் நிராகரிப்புகளும்
நிரம்பி வழிகின்ற என் ஆயுளின்
இறுதி பகுதியில் நிகழாத சந்திப்பிலும் 
மன்னிக்காத நிராகரிப்பின் வாயினில்
நிறுத்த!


எரிமலைச் சீற்றத்திற்குள் சிக்கிய
 சிறு பறவையின் பரிதவிப்பாக என் மனம்
நிலை குலைய என் நிராகரிப்பின் இறுதிக் 
கவிதை எழுதப்படாமல் இருந்திருக்கலாம்!.


கவிப்பிரியை சுஜனி

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.