மதவாத அமைப்புகளின் துரோகம்!

வெள்ளையனே வெளியேறு இயக்கம் (ஆகஸ்ட் 9): மீள்பார்வை
1942இல் மகாத்மா காந்தியின் தலைமையில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் இயக்கம் தொடங்கப்பட்டு. இன்றோடு (ஆகஸ்ட் 9) 76 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இன்றைக்கு சுதேசி இயக்கமாக மார் தட்டிக்கொள்ளும் ஆர்எஸ்எஸ் அன்று என்ன செய்தது? குறிப்பாக அதன் தாய் அமைப்பான இந்து மகாசபையும் (காந்தியைச் சுட்டுக் கொன்ற கோட்சே சார்ந்திருந்த இயக்கம்) முஸ்லிம் லீக்கும் பிரிட்டிஷாருடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்திற்கு துரோகம் இழைத்த வரலாற்றை இங்கு காண்போம்.
1942இல் இரண்டாம் உலகப் போர் நடந்துகொண்டிருந்த சமயம். தெற்கு ஆசியாவை ஜப்பானின் பாசிசக் கூட்டணிப் படைகள் ஆக்கிரமிக்கத் தொடங்கிய காலம். உள்நாட்டில் பிரிட்டிஷாரின் கிரிப் கமிஷன் தோல்வி அடைந்திருந்தது. நாடு முழுவதும் பணவீக்கத்தால் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவியது. அதனால் பஞ்சமும் வறுமையும் மக்களை வாட்டிக்கொண்டிருந்தன. அப்போது போரில் இறங்கியிருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மிகவும் பலவீனமான நிலையில் இருந்தது. பலவீனமான நிலையில் இருந்த பிரிட்டிஷாரை எதிர்த்து ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை தொடங்கினால் மேலும் பலவீனப்படுத்தி நாட்டை விட்டு வெளியேற வைக்க முடியும் என்ற அரசியல் உத்தியுடன் காந்தியால் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக பிரிட்டிஷாருக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தையும் தொடங்கினார் காந்தி. பிரிட்டிஷார் இந்திய வீரர்களைப் போரில் ஈடுபடுத்துவதைக் கண்டித்து காங்கிரசின் அமைச்சர்கள் முன்னதாகவே ராஜினாமா செய்திருந்தனர்.
செய் அல்லது செத்து மடி
ஒத்துழையாமை இயக்கம் தேசிய அளவில், ‘செய் அல்லது செத்து மடி’ என்ற காந்தியின் அறைகூவலுடன் பெரும்வீச்சுடன் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது மேடையில் பேசிய காந்தி அன்றைக்கு இந்துத்துவ இயக்கத்தின் தலைவர்களாக இருந்த டாக்டர் மூஞ்சே, சாவக்கார் ஆகியோர் முஸ்லிம்களை ஆதிக்கம் செய்வதாகக் குற்றம் சாட்டினார் இந்தியா முஸ்லிம்களின் தாய்நாடு, இந்நாடு பன்முகத்தன்மை வாய்ந்தது என்று பேசினார்.
இவ்வாறு உரையாற்றிய காந்தியும் ஜவஹர்லால் நேருவும் வல்லபபாய் பட்டேலும் மற்றும் பல சுதந்திரப் போராளிகளும் ஒரு சில நாட்களிலேயே கைது செய்ப்பட்டனர். அப்போது 3 கட்சிகள் காந்தியின் இயக்கத்திற்கு ஆதரவளிக்கவில்லை. அவர்கள் கம்யூனிஸ்ட்டுகள், முஸ்லிம் லீக் மற்றும் இந்து மகாசபை ஆகும். இதில் இந்து மகாசபையும் முஸ்லிம் லீக்கும் பிரிட்டிஷாருடன் கைகோர்த்துக்கொண்டனர்.
1941இல் வங்காளத்தில் ஃபசூல் ஹக்கின் அமைச்சரவையில் இந்து மகாசபையைச் சேர்ந்த சியாமா பிரசாத் முகர்ஜி நிதி அமைச்சராக இணைந்துகொண்டார். அவர் அமைச்சரவையை வெளியேறும் முன்னதாக அந்த அரசுடன் இணைந்து முஸ்லிம்களுக்கு தனி தேசம் என்ற தீர்மானத்தை இயற்றுவதற்கு உறுதுணையாக இருந்தார்.
சிந்து மாகாணத்திலும் வடமேற்கு மாகாணத்திலும் இந்து மகாசபை முஸ்லிம் லீக்குடன் கூட்டணி அரசு அமைத்தது. அப்போது சிந்து சட்டப்பேரவையில் முஸ்லிம்களுக்குத் தனி நாடு கேட்டுத் தீர்மானம் இயற்றப்பட்டபோது அதற்கு எதிராக இந்து மகாசபை வாக்களி்த்தனர். ஆனால் ஆட்சியில் நீடித்தனர். அப்போது இந்து மகாசபையின் அனைத்துத் திட்டங்களும் சாவர்க்கரினால் இயக்கப்பட்டுவந்தன.
பிரிட்டிஷாருடன் பொறுப்பான கூட்டுறவு
1942இல் கான்பூரில் நடைபெற்ற இந்து மகாசபையின் மாநாட்டில் சாவர்க்கர் தன் தலைமை உரையில் பிரிட்டிஷாருடன் கூட்டு வைத்திருப்பதைப் பொறுப்புடைய கூட்டுறவு என்றும் காங்கிரசைப் போலியான தேசிய அமைப்பு என்றும் பேசினார்.
பிரிட்டிஷாருடன் கொண்டிருந்த உறவை, நடைமுறை அரசியல் என்றும் பொது நலனில் அக்கறை கொண்டு அரசியல் அதிகார அமைப்புகளைக் கைப்பற்றுவதற்கான நியாயமான சமரசங்கள் என்றும் சாவர்க்கர் வர்ணித்தார். சாவர்க்கரின் சரிதையை எழுதிய தனஞ்செய் கீர் இதே கருத்தை முன்வைக்கிறார். அப்போது இந்து மகாசபை சாவர்க்கரின் கருத்தைப் புகழ்ந்ததாகக் குறிப்பிடுகிறார்.
1943இல் சிந்து மாகாண சட்டப்பேரவை பாகிஸ்தான் உருவாக்கப்படுவதற்கு ஆதரவாக இருந்தபோது இந்து மகாசபையானது முஸ்லிம் லீக்குடன் இணைந்து இந்து ராஷ்டிரத்தை உருவாக்கும் நோக்குடன் பல மாகாணங்களில் கூட்டணி ஆட்சி அமைக்கும் நோக்குடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தது. அப்போது நாடு முழுவதும் சுதந்திர தாகத்துடன் கொந்தளித்துக்கொண்டிருக்கும்போது இந்து மகாசபை பிரிட்டிஷாருடன் இணைந்து அவர்களின் ஆதரவுடன் கூட்டணி அரசுகளில் பங்கேற்றுவந்தது. ஜோதிர்மாய ஷர்மா என்ற எழுத்தாளர் தனது ‘இந்துத்துவா: இந்து தேசியம் என்ற கருத்தை ஆராய்தல்’ என்ற (Hindutuva : Exploring the Idea of Hindu Nationalism) தலைப்பில் வெளியான நூலில் இந்திய சுதந்திரத்தைவிட இந்து ராஷ்டிரம் அமைப்பதே மேலான நோக்கமாக இந்து மகாசபைக்கு இருந்தது என்று எழுதுகிறார்.
ஒரே மதம் ஒரே கலாச்சாரம்
உண்மையில் இரு மதவாத அமைப்புகளுமே ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்ற பாசிச சிந்தாந்தத்தில் உறுதியாக இருந்தன. இந்து மகாசபை இந்துக்களைத் தூண்டிவிட்டு, இந்துக்களை மட்டுமே கொண்ட இந்து ராஷ்டிரம் அமைக்க அதற்கான பொது எதிரியாக முஸ்லிம்களைச் சித்தரித்தது. ஆனால், இந்துக்களை அவ்வாறு எதிரியாக முஸ்லிம் லீக் கட்டமைத்ததா என்பது நிரூபிக்கப்படவில்லை. பாகிஸ்தான் உருவாதற்கான எதிர்மறைக் காரணியாகச் செயல்பட்டது இந்து மகாசபையின் மதவெறிப் பிரச்சாரம் என்பதுதான் உண்மை.
நாடு முழுவதும் சுதந்திர தாகத்துடன் கொந்தளித்துக்கொண்டிருந்தபோது இந்து மகாசபையும் அதன் கூட்டாளியாக முஸ்லிம் லீக்கும் பிரிட்டிஷாருடன் இணைந்து ஆட்சி அதிகாரத்தைச் சுவைத்து கொண்டிருந்தன என்பது மறைக்கப்பட்ட, ஆனால், மறுக்க முடியாத வரலாறு.
ஆதாரங்கள்
1 During the Quit India Movement, the Hindu Mahasabha Played the British Game .The Wire
2. சிந்தனைக் கொத்து, எ

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.