ஜோதிகாவின் பத்துக் கட்டளைகள் என்ன?

ஜோதிகா நடித்துள்ள காற்றின் மொழி படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

மிஸ்டர்.சந்திரமௌலி படத்தை தொடர்ந்து போப்டா, கிரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ் சார்பில் தனஞ்செயன், விக்ரம் குமார், லலிதா தனஞ்செயன் தயாரிக்க ராதா மோகன் இயக்கும் படம் ‘காற்றின் மொழி’.

அறிமுக இசையமைப்பாளர் காசிப் இசையமைக்க ஜோதிகா, விதார்த் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தில் ஜோதிகாவின் கதாபாத்திரம் பெண்ணுரிமை சார்ந்த ஒரு கதாபாத்திரமாக உருவாகியுள்ளது.

தனது கதாபாத்திரம் குறித்து கூறியுள்ள ஜோதிகா, “காற்றின் மொழி, எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்றாகி விட்டது. அதனால்தான் வசனங்கள் அதிகம் உள்ள இப்படத்திற்கு நானே டப்பிங் பேசி வருகிறேன். பெண்கள் சுயமாக சம்பாதித்து, தங்கள் வாழ்க்கையை தங்களுக்குப் பிடித்தபடி வாழ வேண்டும் என்ற கருத்தை இப்படம் வலியுறுத்துகிறது. அதற்கு அவர்கள் குடும்பத்தினரும் ஆதரவு தர வேண்டும். இத்தகைய பெண்களின் மேம்பாட்டிற்கு வழி காட்டும் 10 கட்டளைகளை உள்ளடக்கிய ஒரு போஸ்டர் டிசைன் ‘காற்றின் மொழி’ படத்திற்காக உருவாக்கியது எனக்குப் பிடித்திருக்கிறது” என்றார்.

போஸ்டரில் ஜோதிகா பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய பத்து கட்டளைகளை வலியுறுத்துகிறார்.

1.உன் விருப்பம் போல் உடை உடுத்துவாயாக.

2.நீ விரும்புவதைச் செய்வாயாக.

3. உன் கணவன் உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டாதிருப்பாயாக.

4.பசித்தால் முதலில் நீயே சாப்பிடுவாயாக.

5.குண்டாய் இருக்க விரும்பினால் குண்டாய் இருப்பாயாக.

6.வீட்டுப் பணிகளில் உன் கணவனையும் பங்கெடுக்கச் செய்வாயாக.

7.நீ சம்பாதித்து உன் விருப்பம் போல் செலவு செய்வாயாக.

8.உன் மனம் மறுப்பதை, ஏற்காதிருப்பாயாக

9.ஆணும் பெண்ணும் சரி சமம் என்பதை அறிவாயாக.

10.மனதில் பட்டதை சொல்வாயாக

இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் காற்றின் மொழி திரைப்படம் அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது.

#india  #tamilnews   #jothika 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.