சாய்பாபாவின் குணம் என்ன?

கோதுமையை அரைத்துக் கொண்டிருப்பதால் கிஞ்சித்தும் பயனில்லை. எனவே எண்ணிக்கைகளில் கவனத்தை செலுத்துவதைக் குறைத்துக் கொண்டு, எண்ணத்தில் இறைவனை நிலை நிறுத்துவதில் கவனம் வையுங்கள் என்பதுதான் சாய்பாபாவின் நற்போதனை!

"எனது நாமத்தை பக்தியுடனும், நம்பிக்கையுடனும் சொல்பவர்களின் எல்லா விருப்பங்களையும் நான் நிறைவேற்றுவேன். நிரந்தரமாக செய்யப்படும் என் நாமஜெபம் உங்களை என்னிடம் சேர்க்கிறது” என்கிறார் பாபா.

ஸ்ரீ சாய் கற்பக விருக்‌ஷா டிரஸ்ட் சார்பில் திருச்சி அருகே உள்ள அக்கரைப்பட்டியில் அழகாய் எழுப்பப்பட்டு வரும் சாய்பாபா ஆலயத்தைப் பார்க்க தினம் தினம் பலர் வருகிறார்கள். சிலர் மனம் உலர்ந்து வருகிறார்கள், சிலர் உடல் தளர்ந்து போய் வருகிறார்கள், பலர் நிம்மதி இழந்து வருகிறார்கள்.

ஆனால் இங்கிருந்து செல்பவர்கள் எல்லாருமே தூய உள்ளத்தோடு, தெளிந்த சிந்தனையோடு, மலர்ந்த குணத்தோடு செல்வார்கள். ஆம். அக்கரைப்பட்டி அருளாளனின் அனுக்ரஹம் அது. ஒவ்வொரு நாளும் காலை முதல் இரவு வரை ஆர்த்தி வழிபாடுகள் நேர்த்தியாக நடந்து பூர்த்தியாகிக் கொண்டிருக்கின்றன. இதனால் அக்கரைப்பட்டியில் வந்து சேர்த்தியாகிறவர்கள் தங்களது பிரச்னைகளை எல்லாம் தீர்த்துக் கொள்கிறார்கள்.



நாம் ஏற்கனவே சொன்னது போல அக்கரைப்பட்டியில் அந்த வேப்பமர பாறைக்கு இடையே இனிப்பாய் எழுந்து நிற்கிற சாய்பாபாவின் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். ஒவ்வொரு அபிஷேகத்துக்கும் ஒவ்வொரு அழகு. ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு கவின். ஒவ்வொரு பொழுதிலும் ஒவ்வொரு எழில்.

சாய்பாபாவின் அழகு தெரிகிறது, எழில் தெரிகிறது, கவின் தெரிகிறது. சாய்பாபாவின் குணம் என்ன?

அக்கரைப்பட்டி சாய்பாபாவின் பக்தர் ஒருவரே தனது வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்துகொண்ட அந்தத் தகவலை இந்தக் கேள்விக்கான பதிலாகவே நாம் பதிந்துகொள்ளலாம்.

சாய்பாபாவின் குணம் என்ன?

”சாய்பாபா குணங்களேதும் இல்லாதவர்; குணங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர். பக்தர்களின் மங்களத்துக்காகத் தூய நற்குணங்களுடன் ஓர் உருவம் ஏற்றுக்கொண்டார். அவருடைய பாதாரவிந்தங்களில் நான் முழுமனத்தோடு சரணடைகின்றேன்.

ஸமர்த்த சாயியை அடைக்கலமும் பாதுகாப்பும் வேண்டி சரணடைந்தவர்கள் எத்தனையோ அனர்த்தங்கள் அதாவது துன்ப துயரங்கள் நேராமல் தப்பித்துக்கொண்டார்கள். யானும் அந்தச் சுயநலத் தேவைக்காகவே அவருடைய பாதங்களில் தலை சாய்க்கின்றேன்.

பக்தர்களின் பிரேமையைச் சுவைப்பதற்காகவும் அவர்களுடன் லீலைகள் புரிவதற்காகவும் உருவமற்ற ஒன்றேயான சாயி, உருவத்தையும் பன்மையையும் ஏற்றுக்கொண்டார். அவருடைய அன்புக்கு நமஸ்காரம்.

ஓ குருராயரே ! ஓ ஆனந்த மூர்த்தியே ! நீரே பாதையும் முடிவாகச் சென்றடையும் இடமுமாகும். நீரே நான் இளைப்பாறும் சோலை; ஏனெனில், உம்மால்தான் என்னைப் பீடிக்கும் துன்பங்களையும் வ­லியையும் சுகப்படுத்த முடியும்” என்கிறது அந்த சாய் சத் சரிதத்தில் இருந்து மேற்கோள் காட்டப்பட்ட அந்த செய்தி.

ஆம். சாய்பாபாவின் குணம் என்ன என்று இப்போது புரிகிறதா?

(பாபா பரவசம் தொடரும்)

SREE SAI KARPAGAVIRUKSHA TRUST
[Public Charitable Trust Regd. No. 1379/2009]
475/4A4, Akkaraipatti, Kariyamanickam Road
Near Samayapuram, Mannachanallur TK
Trichy Dt, TN, India 621112.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.