தொண்டர்களோடு தொண்டனாய் கருணாநிதி பின்னால் கண்ணீருடன் நடந்து சென்ற ஸ்டாலின்..!

ராஜாஜி அரங்கிலிருந்து கருணாநிதியின் உடல் ராணுவ ட்ரக்கில் ஏற்றி அண்ணா சமாதிக்கு கொண்டு செல்லும்போது, அங்கிருந்து கருணாநிதியை அடக்கம் செய்யப்படும்  இடம் வரை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களோடு தொண்டனாய் கண்ணீர் சிந்தியபடி நடந்து வந்தார். அவரை வண்டியில் ஏறிக்கொள்ளும்படி பலர் வற்புறுத்தியும் அவர் நடந்தே சென்றார்.

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நல குறைவால் நேற்று மாலை காலமானார்.  அவரது  உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்தது கருணாநிதி உடலுக்கு தேசியக் கொடி போர்த்தி ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது.

இதையடுத்து கருணாநிதியின்  உடலுக்கு அகில இந்திய அரசியல் தலைவர்களும், அரசியல்  பிரமுகர்களும், திரை உலக பிரபலங்களும் வந்து அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து சரியாக 4 மணிக்ககு கருணாநிதியின் இறுதிப்பயணம் தொடங்கிது. அதற்கு முன்பு இறுதியாக அவரது குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். கலைஞரின் மகன்கள், பேரன்கள் உள்ளிட்டோர் இறுதியாக அஞ்சலி செலுத்தினர்.

இதை தொடர்ந்து கருணாநிதியின்  உடல்  ராணுவ வாகனத்தில் ஏற்றபட்டு இறுதி யாத்திரை தொடங்கியது. தொடர்ந்து ராணுவ வாகனத்தில் கருணாநிதியின்  உடல்  சிவானந்த சாலை, அண்ணா சாலை, காமராஜர் சாலை வழியாக ஊர்வலமாக அண்ணா நினைவகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

கருணாநிதியின் உடல் ராணுவ வண்டியில் ஏற்றப்பட்டதில் இருந்து அந்த வண்டியின் பின்னாலே ஸ்டாலின் கண்ணீருடன் தொண்டர்களோடு தொண்டனாய் நடந்தே வந்தார். அவரை வண்டியில் ஏறிக்கொள்ளும்படி பலர் வற்புறுத்தியும் அவர் நடந்தே சென்றார். இதைப்பார்த்த தொண்டர்கள் ஸ்டாலினை வெகுவாகப் புகழ்ந்தனர்.

#Kalaignar-karunanidhi
#Karunanidhi-death
#stalin
#political

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.