மாவையின் உதவியாளரின் அதிகார துஷ்பிரயோகம்!

வலிகாமம் வடக்கு பிரதேசசபை தவிசாளரும், மாவை சேனாதிராஜாவின் உதவியாளருமான சோ.சுகிர்தன், பிரதேசசபைக்கு சொந்தமான வாகனத்தை தனது சொந்த தேவைக்கு பயன்படுத்தி வருகிறார். தனது மனைவியை
பாடசாலைக்கு ஏற்றியிறக்கும் வேலையை, பிரதேசசபைக்கு சொந்தமான வாகனத்தின் மூலமே செய்து வருகிறார்- என பிரதேசசபை உறுப்பினர்கள் உள்ளூராட்சி உதவி ஆணையாளரிற்கு முறைப்பாடு அனுப்பியுள்ளனர்.

மல்லாகத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து தினமும் மாதகலில் உள்ள மனைவி கற்பிக்கும் பாடசாலைக்கு, பிரதேசசபைக்குரிய வாகனத்தில் கொண்டு சென்று இறக்குவதும், மதியம் ஏற்றிவருவதும் தினமும் நடக்கும் விடயம் என முறையிட்டுள்ளனர். கடந்தமுறை தவிசாளராக பதவிவகித்தபோது, பிரதேசசபை வாகனத்தில் உடுவில் மகளிர் கல்லூரியில் கல்விகற்கும் தனது பிள்ளைகளை ஏற்றி இறக்கியதாக அவர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.

அத்துடன் பிரதேசசபைக்குரிய வாகனத்தை தனது வீட்டிலேயே இரவில் தரித்து வைக்கிறார். இது விதிமீறலாகும். இது குறித்து பிரதேசசபை அமர்வில் பிற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியபோதும், “பிரதேசசபை தவிசாளருக்கு தரப்பட்ட வாகனத்தை அவர் விரும்பிய இடத்தில் தரித்து வைப்பதில் தவறில்லை“ என கூறி வருகிறார்.

இதேவேளை, கட்சி தேவைகளிற்காக இந்த வாகனம் பயன்படுத்தப்படுகிறது. தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் முல்லைத்தீவில் நடந்தபோது, இந்த வாகனத்திலேயே சுகிர்தன் அங்கு சென்றிருந்தார். எனினும், ரன்னிங் சாட்டில் உள்ளூரில் வாகனம் பயன்படுத்தப்பட்டதாகவே பதிவுசெய்யப்பட்டுள்ளது.

மனைவியை ஏற்றி இறக்குவது குறித்து உள்ளூராட்சி ஆணையாளரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என தெரிகிறது.

#jaffna   #tamilnews  #sukirthan  #mavaisenathiraja #whife

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.