வடக்கு மாகாண சபை உறுப்பினர் அமைச்சர் ஹக்கீமுக்கு கடிதம்!

ஆசி­ய­ அ­பி­வி­ருத்­தி­ வங்­கி­யின் நிதிப்­பங்­க­ளிப்­பு­டன் வவு­னி­யா­வில் அமைக்­கப்­பட்­டுள்ள குடி­தண்­ணீர் வழங்­க­லுக்­கா­ன­ நீர்த்­தேக்­கத்­தி­ல்­ இருந்து வெளி­யே­றும் மேல­தி­க ­நீரை நெற்­செய்­கைக்­குப் பயன்­ப­டுத்­து­வ­தற்கு அனு­ம­திக்­கு­மாறு
மாகாண முன்­னாள் சுகா­தார அமைச்­ச­ரும் வவு­னி­யா­மா­வட்ட மாகாண சபை உறுப்­பி­ன­ரு­மா­கிய மருத்­து­வர் ப. சத்­தி­ய­லிங்­கம் மத்­தி­ய­ நீர்­வ­ழங்­கல் அமைச்­சர் ஹக்­கீமுக்குக் க­டி­த­மொன்றை அனுப்­பி­ வைத்­துள்­ளார்.

அதில்­மே­லும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது :
மேற்­ப­டி­ திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு விவ­சா­யி­ க­ளின் 165 ஏக்­கர்­வ­யல்­நி­லம் அர­சால் சுவீ­க­ரிக்­க ப்­பட்­டது. இதற்­கு­மாற்­றீ­டாக அதே­ப­கு­தி­யில் காணப்­பட்ட கைவி­டப்­பட்ட குளங்­கள் 2 சீர­மைக்­கப்­பட்டு அதன் கீழாக வயல் நிலங்­கள் உரு­வாக்­கப்­பட்டு விவ­சா­யி­க­ளுக்கு வழங்­கப்­பட்­டன.

எனி­னும் வயல் நிலங்­கள் கைய­ளிக்­கப்­பட்டு கடந்த மூன்று வரு­டங்­க­ளாகக் குளங்­க­ ளுக்கு போதிய நீர்­வ­ர­ வில்லை. ஏற்­கனவே வி­வ­சாய அமைப்­பு­க­ளு­டன் செய்­து­கொள்­ளப்­பட்ட முத்­த­ரப்­பு­ ஒப்­பந்­தத்­தின் மூலம் சீர­மைக்­கப்­பட்ட குளங்­க­ளுக்­கான நீர்­வ­ரத்து தொடர்­பில் எழுத்து மூல­மாக உறு­திப்­ப­டுத்­தப்­ப­டு­மென உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டது.

மழைக்­கா­லங்­க­ளில் அணைக்­கட்­டி­லி­ருந்து வெளி­யே­றும் மேல­தி­க­நீ­ரா­னது , ஆற்­றில்­பாய்ந்து கட­லில்­க­லக்­கின்­றது.  எனவே அணைக்­கட்­டி­லி­ருந்து சுலுசு மற்­றும்­கால்­வாய் அமைப்­ப­தனூ­டாகச் சீரமைக்­கப்­பட்ட குளங்­க­ளின் நீர்­வ­ரத்­தினை அதி­க­ரிக்­க­மு­டி­யும். இத­னால் விவ­சா­யி­கள் பிரச்சி­னை­ க­ளின்றி விவ­சாய நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­ப­ட­மு­டி­யும்.

இது­தொ­டர்­பில் வவு­னி­யா­மா­வட்ட ஒருங்­கி­ணைப்­புக் குழுக்­கூட்­டத்­தில் என்­னால் ­கொண்­டு ­வ­ரப்­பட்ட பிரே­ரணை அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­து­டன் ,நீர்­வ­ழங்­கல் வடி­கா­ல­மைப்பு ச்சபை அனு­ம­திக்­கு­மி­டத்து வேலையை செய்­வ­தற்­குத் தயா­ராக இருப்­ப­தாக கம­நல அபி­வி­ருத்தி திணைக்­க­ளம் தெரி­வித்­துள்­ளது.எ

எனவே விவ­சா­யி ­க­ளின் நன்­மை ­க­ருதி மேற்­படி திட்­டத்தை நடை­ மு­றைப்­ப­டுத்த அனு­ம­திக்­கு­மாறு கேட்­டுக்­கொள்­கின்­றேன் என­அந்­தக்­க­டி­தத்­தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.