கருணாவின் பிணை மனு நிராகரிப்பு!

முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் குறித்த பிணை மனுவை இன்று நிராகரித்துள்ளார்.

அரசவாகனத்தை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டிற்காக கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு பிணைமனு கோரி தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே பிரதான நீதவான் மனுவை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.