மாற்றம் கொண்ட மலையத்திற்கான திறவுகோல் கல்வியே[படங்கள் இணைப்பு]

அண்மைக் காலத்தில் இராகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று உயர் நிலையில் இருக்கும் இளம் கல்வியியலாளர்களைக்கொண்டு இராகலை உவணம்அமைப்பு உருவாக்கப்பட்டது.
இவ்வமைப்பின் இரண்டாவது ஒன்று கூடல் இன்று (2016.12.11) இராகலை தமிழ் மகா வித்தியாலய தொழில்நுட்ப கட்டிடத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
கடந்த முறை வருகை தந்தவர்களோடு இம்முறை சில புதுமுக கல்வியலாளர்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்வினை செல்வி தயானி தொகுத்து வழங்க முறையே தலைவர் சுரேஸ் அவர்களின் தலைமை உரை, செயலாளர் கிருஸ்னன் அவர்களின் சென்ற மாத செயலறிக்கை, இராகலை தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபரின் சொற்பொழிவு, இளம் சட்டத்தரணி பிரியதர்ஷினியின் உரை உட்பட சட்டத்தரணி மோகன் அவர்களின் கருத்தாடல், பாடசாலையின் பெற்றோர் அபிவிருத்தி சங்க செயலாளரின் கருத்தாடல், அபிவிருத்தி உத்தியோகத்தர் முரளி அவர்களின் கருத்தாடல், பொறியியலாளர் சதீசனின் அவர்களின் கருத்தாடல், கல்விப் பணிப்பாளர் துரையரசன் அவர்களின் கருத்தாடல் என்பவற்றோடு சபையோரின் கலந்துரையாடல்களும் நடைபெற்றது.

அமைப்பின் பெயர், நோக்கங்கள், யாப்பு ,எதிர்கால திட்டங்கள் தொடர்பில் கருத்துக்கள் விமர்சன ரீதியில் பகிரப்பட்டது. இதில் முக்கியமான சில கருத்துக்களை அமைப்பின் நிர்வாகக் குழு ஏற்றுக் கொண்டுள்ளதோடு எதிர்காலத்தில் அவர்களின் விமர்சனங்களுடன் கூடிய அறிவுரைகளையும் ஏற்றுக் கொள்ள எத்தனித்துள்ளது.

அத்துடன் அண்மையில் தனது கன்னிக் கவி நூலை வெளியிட்ட செல்வி தயானிக்கு இராகலை உவணம் அமைப்பினர் ஊடாக நினைவுச் சின்னம் ஒன்று வழங்கி கெளரவித்தனர்.

அகரத்திலிருந்து சிகரத்தை நோக்கி பயணிக்கும் இவ்வமைப்பு மாணவர்களின் கல்வி, ஒழுக்கம் மற்றும் இதர திறமைகளை வளர்க்க தன்னாலான முயற்சியை எடுப்பதில் உறுதி பூண்டுள்ளதோடு எதிர் வரும் காலங்களில் ஆக்கபூர்வமான விடயங்களை முன்னெடுத்து மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் தன்னால் முடிந்த சேவைகளை அர்ப்பணிப்புடன் நடாத்தும் என்பதில் துளியளவும் ஐயமில்லை.

#முடியாதென்ற மடைமையை முடிச்சிட்டு கொளுத்துவோம்
#முடியுமென்ற துணிவை நெஞ்சினில்வி தைப்போம்
#வளர்வோம்வா ழ்வோம்பிறரை வளர்ப்போம்
#எழுவோம்எழுதுவோம் பிறரை எழுப்புவோம்

இராகலை உவணம் அமைப்பின் தொகுப்பாளர்- தயானி விஜயகுமார்15326480_857394164400605_3789181241567003515_n

15337445_857394294400592_8012542799704275672_n

15338693_857394321067256_6558933134756413949_n

15355801_857394177733937_1668361358659408184_n

15380648_857394221067266_6288807805829051731_n

15390920_857394251067263_6154374992530459947_n

15390935_857394397733915_2440531832652484050_n