இருளுள் இதயபூமி ஆவணப்படம் வெளியீட்டு நிகழ்வு[படங்கள் காணொளி இணைப்பு]

வடக்கையும்,கிழக்கையும் பிரிக்கும் நோக்கோடு முல்லைத்தீவின் தென்கரையில் திட்டமிட்ட சிங்கள

குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.அந்த நிலத்திற்கு உரித்தை கொண்ட தமிழர்கள் அலையவிடப்பட்டிருக்கின்றனர் அவ்வாறு அலைபவர்களின் குரல் அடங்கிய ஆவணப்படம் .நில ஆக்கிரமிப்பு, சிங்கள மயமாக்கல், குடியேற்றங்கள் மற்றும் பௌத்த மயமாக்கல் தொடர்பில் யாழ்.ஊடக அமையத்தினால் தயாரிக்கப்பட்ட இருளுள் இதயபூமி எனும் ஆவணப்படம் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் றக்கா வீதியில் அமைந்துள்ள கலைத்தூது மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை  (12.12.2016) மாலை 3.30 மணியளவில் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து ஆவணப் படத்தினை  உத்தியோகபூர்வமாக அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், சிவில் சமூக பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள், வடமாகாண அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூக அமைப்பு பிரதிநிதிகள் என பலரிடம் குறித்த ஆவணப் படம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

img_5212

i

i1

i2

i3

i4

i5

i6

i7

i8

i9

images