‘போர்க்களத்தில் ஒரு பூ’ திரைப்பட இயக்குநர் கு.கணேசன் அவர்கள் படப்பிடிப்பில் காயம்!

‘போர்க்களத்தில் ஒரு பூ’ திரைப்பட இயக்குநர் கு.கணேசன் அவர்கள் படப்பிடிப்பின் போது காயமடைந்துள்ளார்.

கு.கணேசன் அவர்கள் இயக்கி நடித்துவரும் ‘நம் குழந்தை’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பின் போதே அவர் காயமடைந்துள்ளார்.
கு.கணேசன் அவர்களது இயக்கத்தில் நான்கு மொழிகளில் உருவாகிவரும் 9 வது திரைப்படமான ‘நம் குழந்தை’ படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி தலையில் காயமடைந்துள்ளார்.
‘போர்க்களத்தில் ஒரு பூ’ திரைப்படமானது இவரது 7 வது திரைப்படமாகும். தணிக்கைக்குழு மற்றும் நீதிமன்றத் தடை காரணமாக வெளிவர முடியாதுள்ள நிலையில் ‘சவி நிலையா’ எனும் குழந்தைகளுக்கான திரைப்படத்தை தனது 8 வது திரைப்படமாக இயக்கியிருந்தார். அந்த படத்தில் நடித்த சிறுமிக்கு கர்நாடக மாநில அரசின் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது