சுக வாழ்வு நிலையத்தின் “தேடும் சிட்டுகள்” எனும் சஞ்சிகை வெளியீடு[படங்கள் இணைப்பு]

சுக வாழ்வு நிலையத்தின் “தேடும் சிட்டுகள்” எனும் சஞ்சிகை வெளியீடும் பரிசளிப்பு விழாவும் இன்று

வியாழக்கிழமை காலை 10 மணியளவில் யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் ஆரம்பமாகியது.

சுக வாழ்வு நிலையத்தின் ஸ்தாபகர் அருட்பணி பி.செலஸ்ரின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக அமலரித்தியாகிகள் சபை யாழ். மாவட்ட முதல்வர் செ. எட்வின் வசந்தராஜா, சிறப்பு விருந்தினராக கோப்பாய் பிரேதச செயலாளர் சுபாசினி மதியழகன், கௌரவ விருந்தினராக யாழ் மாவட்ட செயலக உளவளத்துறை இனைப்பாளர் ந. உதயகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் ‘தேடும் சிட்டுகள்’ எனும் சஞ்சிகையினை பட்டாம்பூச்சி சிறுவர் கழக உறுப்பினர் செ.ஜீவிதன் வெளியிட்டு வைக்க பிரதம விருந்தினர் எட்வின் வசந்தராஜா பெற்றுக் கொண்டார். மேலும் சிறப்பு பிரதிகளை சிறப்பு விருந்தினர் மற்றும் கௌரவ விருந்தினர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

மேலும் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன. மாணவர்களின் கலைநிகழ்வுகள், நத்தார் பாடல் போன்றனவும் அரங்கேறின.

இந்நிகழ்வில் சிறுவர்கள் பெற்றோர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.