போலி செய்திகளை தடுக்க பேஸ்புக் அதிரடி நடவடிக்கை!

பேஸ்புக் சமூக வலைத்தளம் இன்னுமொரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.போலி செய்தி

பரப்புவதனை தடுப்பதற்கான வசதியினையே பேஸ்புக் தற்போது அறிமுகம் செய்துள்ளது.
 
பேஸ்புக்கில் பதிவாகும் பதிவுகள் தொடர்பில் முறைப்பாடு செய்யும் வசதி தற்போது பேஸ்புக் பயனாளர்களுக்ககாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 
ரிபோர்ட் போஸ்ட் என்ற வசதியின் ஊடாக இதனை மேற்கொள்ள முடியும். அதற்கமைய பதிவிடும் பதிவுகள் போலியானதென்றால் அதனை குறிப்பிட்டு முறைப்பாடு செய்ய முடியும். 
 
கடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பேஸ்புக் சமூக வலைத்தளம் ஊடாக போலியான பல செய்திகள் பரப்பப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 
அவ்வாறான போலி தகவல்கள் பரப்பப்படுவதனை தடுப்பதற்காக அந்த புதிய விடயத்தை அறிமுகப்படுத்தி வைப்பதற்கு பேஸ்புக் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது