2017 ஜனவரிக்குள் மோட்டோ எக்ஸ் ப்ளே மாடலில் மாறும் ஆண்ட்ராய்டு 7.1 நெளகட் ஆபரேட்டிங் சிஸ்டம்!

கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பிரபல ஆண்ட்ராய்டு நிறுவனமான மோட்டோரோலா

தனது புதிய தயாரிப்பான மோட்ட எக்ஸ் ப்ளே என்ற மாடலை வெளியிட்டது.தற்போது மோட்டோரோலோ நிறுவனம் ஆண்ட்ராய்ட் நெளகட் சாப்ட்வேரை சோதனை செய்து வருவதாகவும் முதல்கட்ட சோதனை முடிந்ததும் மோட்டோ எக்ஸ் ப்ளே மாடலில் அப்டேட் செய்வது குறித்த உறுதியான தகவலை வெளியிடும் என்றும் செய்திகள் கூறுகின்றன.

மோடோ எக்ஸ் ப்ளே மட்டுமின்றி எக்ஸ் ஃபோர்ஸ், எக்ஸ் பியூர் ஆகிய மாடல்களிலும் ண்ட்ராய்டு 5.1.1 லாலிபாப் வெர்ஷன் ஆபரேட்டிங் சிஸ்டத்திற்கு பதிலாக ஆண்ட்ராய்டு 7.1 நெளகட் ஆபரேட்டிங் சிஸ்டத்தை மாற்ற மோடோரோலோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. மோடோரோலோ எக்ஸ்ப்ளே மாடல் 5.5-இன்ச் டிஸ்ப்ளேவுடன் 1920×1080 பிக்சல் ரெசலூசன் இருக்கும் என்பது இம்மாடலை உபயோகிப்பவர்கள் அனைவரும் அறிந்ததே. மேலும் இந்த போனில் ஸ்னாப்டிராகன் 615.7 GHz ஆக்டா கோர் பிராஸசர், மற்றும் 16 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் ஆகியவையும், 2 ஜிபி ரேமும் உள்ளது. இதனுடன் புதிய வரவாக ஆண்ட்ராய்டு 7.1 நெளகட் ஆபரேட்டிங் சிஸ்டமும் இணைந்துவிட்டால் இந்த ஸ்மார்ட்போனின் தரம் அதிகரிக்கும் என்பது எள்ளளவும் சந்தேகம் இல்லை.