விழித்தெழு தமிழினமே..! எழுக தமிழாய்..!

மக்கள் புரட்சி வெடிக்கட்டும்
சுதந்திர தமிழர் தேசம் மலரட்டும்.

நிலம் மொழி பொருளாதாரம் கலாச்சாரம்
போன்ற தேசத்தின் தூண்களை காப்போம்

விழித்தெழு தமிழினமே எழுக தமிழாய்
குறுகிய அரசியல் இலாபத்திற்காய்

ஆசனத்திற்காய் ஏங்கிக்கொண்டிருக்கும்
அரசியல் பிரமுவர்களே

நீ ஓர் தமிழனாய் இருந்தால் பகிரங்கப்படுத்து
உன் தமிழ் உணர்வை எழுக தமிழுக்காய்

வாக்குக்காய் வாசல் ஏறுமுன் சிந்திப்பாய் ..!
தமிழனாய் அல்லேல் சிதைபடுவாய் ..!
என்றொரு நாள் எம்மினத்தால்..!

-தர்மலிங்கம் சுரேஷ்-