தடைகளைத் தகர்த்து மீண்டும் எழுந்திடுவோம்..!

தமிழர் தாகம் தமிழீழ தாயகம்
தானாய் வந்த தாரக மந்திரம்!

விடுதலைப் போர்
வீரகாவியத்தின் காலம்!

எமக்காகவும் எம் சந்ததியினருக்காகவும்
விதைக்கப்பட்ட வித்துகள் நீங்கள்!
உங்கள் வாழ்வு ஈக வாழ்வு
சரித்திரம் மாற்றிட
சமர்களம் புகுந்து
சரிந்து வீழ்ந்து

கல்லறைகளில் இன்று
காவியமாய் வாழும் மாவீரர்கள்
துயிலிடமெல்லாம் விளக்கொளி சிந்த
கார்த்திகை மாதம் கண்ணீரில் நனையும் !

தர்மத்தின் வழி கடந்தவர்கள்
தலைவனின்றி
தடுமாறும் நிலை!
நெறி பிறழ்ந்த கூட்டம்
நீதி மொழி பேசும் அவலம்!

தோளோடு தோள் கொடுத்த
தோழர்களெல்லாம் துரோத்தின் பிடியில்
தமிழின விடுதலைக்காய்
தன்னலமற்று
தியாக வேள்வி பூண்டவர்கள்
தன்னுயிர் மாய்ந்து!

ஒழிந்து விட்டதாக ஓலமிடுபவரிடம்
விழித்திருபதையும்
வீழ்ந்துவிடவில்லை என்பதையும்!

தடைகளைத் தகர்த்து
மீண்டும் எழுந்திடுவோம்
என்பதையும் உணர்த்துங்கள்!

தோழிகவிதாயினி
01.01.2017