திருமலையில் 5 மாணவர்களின் படுகொலையில் உயிர் காவு கொள்ளப்பட்ட நாள்!

2006ம் வருடம் தைத்திங்கள் இரண்டாம் நாள் மாலை கடற்கரை முன்றிலில் இடம்பெற்ற மாணவர் படுகொலையில் 5 உயிர்கள் காவு கொள்ளப்பட்டது.

தமிழர் எம் தேசத்தில்
காந்தியின் சிலைமுன்னே
அகிம்சையின் தலை கவிழ்த்தி
உன்னேடு ஐவரை
திருமலையின் கடல் நடுவே கதிரவன் புதையுண்ட சமயம் பார்த்து வேரறுத்த பாவிகள் இன்னும் தண்டிக்கப் படவில்லை……..
பத்திரமாய் பெற்றெடுத்து பார்த்துப் பார்த்து
தினம் வழர்த்த அன்பின் தலைமகனை
துடிக்க வைத்தே சாய்த்தனர் காடையர்கள் அனறு….
அன்போடு அறிவூட்டி
ஆயிரம்தான் கதை சொல்லி
பாலூட்டி சீராட்டி
தவமிருந்து பெற்றவயிறு பற்றி எரிகிறதே பத்தாண்டு கழிந்த பின்பும் …..இன்று
பாசமாய் அரவணைத்து விரல் பிடித்து நடை பழக்கி -உயரத்தூக்கி முத்தமிட்டு உயிர்தந்த தந்தையவர் ஏனோ இடிந்துதான் போனார்
தெருவோரம்
தமிழ் மகன்கள்
உடல் கிழிந்த நிலை கண்டு……
கூடி வாழ்ந்த சகோதரங்கள் நாம் – ஓடித்திரிந்த ஊர் மறந்து தனித்து விட்ட அனாதைகளானோம் அயல்நாட்டில் …..
உறவுகள் அழுதனர்
நன்பர்கள் துடித்தனர்
மாணவர் உம் வாயில்லா நிலைகண்டு
அஃகிர்தினைகூட அழுதிருக்கும் நேரம்
ஊரே பற்றி எரிந்திட மனிதமே கொதித்தெழுந்த நாள் அன்று.