அடுத்தவனை நம்பி வாழாதவன் விவசாயி..!

மழைக்காக மேகத்தை காற்று இழுத்து வந்தது

அதே காற்று மழையை துரத்தி விட்டது

வெயிலும் மழையும் பெய்தால்
வெள்ளம் என்றார்கள்
அது இன்று இல்லை

வானம்பாடி பறவை தாழ்ந்து பறந்தால்
மழைக்கான அறிகுறி என்பார்கள்
காலம் மாற்றி விட்டது
விதைத்தவனை விதையாக்குமா
இந்த காலம்
அடுத்தவனை நம்பி வாழாதவன்
விவசாயி
படைத்தவனை நம்பி வாழ்வபன்
படைத்தவன் பாரவிட்டால்
மண்ணுக்கு இரையாவது நிச்சயம்

காலத்தை நம்பி பயிர் விதைத்தான்
காலம் உயிரை கொய்கின்றது.

-மட்டுநகர் கமல்தாஸ்-