க்ரீன் ஆப்பிளில் உள்ள நன்மைகள்!

ஆப்பிள் பார்ப்பதற்கு எவ்வளவு அழகாய் இருக்கிறதோ

அவ்வளவு நன்மைகளையும் தருகிறது. தினமும் ஆப்பிள் சாப்பிட்டால் போதும் எந்த நோய்களும் உங்களிய நெருங்காது என்பது 100 சதவீதம் உண்மை. அதிலுள்ள விட்டமின் , மினரல்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் உடலுக்கு மிகவும் நன்மைகள் அளிக்கக் கூடியவை.

ஆப்பிளின் தோலில் இருக்கும் சத்துக்கள் உடலில் அனைத்துவிதமான நோய் எதிர்ப்பு செல்களையும் தூண்டுகின்றன. அதுவும் க்ரீன் ஆப்பிளில் உள்ள சத்துக்கள் சிவப்பு ஆப்பிளை விட அதிகம் என கூறுகின்றனர்.

மலச்சிக்கலை குணப்படுத்தும்:

க்ரீன் ஆப்பிளின் தோல் மற்றும் சதைப்பகுதிகளில் அதிக அளவு நார்சத்துக்கள் உள்ளன. இவை குடலின் இயக்கத்தை நெகிழ்வுபடுத்துகின்றன. தினமும் ஆப்பிளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலை ஏற்படாது.

எலும்புகளுக்கு பலம்:

க்ரீன் ஆப்பிளில் அனைத்து முக்கியமான மினரல்களும் உள்ளன. கால்சியம் , பாஸ்பரஸ், காப்பர், மெக்னீசிய, போன்ற சத்துக்கள் எலும்பு வளர்ச்சிக்கு மிக முக்கிய தேவைகளாகும். இது தைராய்டு ஹார்மோனை சுரக்க வைக்கிறது.

குடல் புற்று நோயை தடுக்கும்:

க்ரீன் அப்பிள் குடலிலுள்ள பாதிப்புகளை சரிசெய்கிறது. அதிலுள்ள சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் குடலில் தங்கும் கிருமிகள் மற்றும் நச்சுக்களை அகற்றி குடல் இயக்கத்தை பலப்படுத்துகிறது. முக்கியமாக குடல் புற்று நோய் வராமல் தடுக்கிறது.

வளர்சிதை மாற்றத்தை தூண்டும்:

உடலின் மிக முக்கிய செயல்பாடான வளர்சிதை மாற்றத்தை தூண்டுகிறதி. ஜீரண சக்தியை அதிகப்படுத்தும்.

கெட்ட கொழுப்பை குறைக்கிறது:

இதய தமனிகளில் அடைக்கும் கொழுப்புகளான LDL – என்ற கெட்ட கொழுப்பை குறைக்கச் செய்கிறது. நல்ல கொழுப்பான HDL – ஐ அதிகப்படுத்தி, இதயத்தை பலப்படுத்தும்.

அல்சைமர் நோயை தடுக்கும்:

மனம் பிறழ்ந்து அல்லது ஞாபக சக்தியை முழுக்க மழுங்கடிக்கும் அல்சைமர் நோயை வயதான பின் வர விடாமல் தடுக்கும் பண்புகளைக் கொண்டது இந்த க்ரீன் ஆப்பிள்.

நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் கல்லீரல்:

நோய் எதிர்ப்பு மண்டலத்தை தூண்டுகிறது. அதனை முழுவதும் சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது. இதனால் கிருமிகள் தாக்குவது குறையும். ஆரோக்கியமாக திகழ்வீர்கள். அதுபோல் கல்லீரலை பலப்படுத்துகிறது, அன்றாடம் தங்கும் நச்சுக்களை வெளியேற்றுகிறது. வயிற்றிலுள்ள என்சைம்களை நன்றாக தூண்டுகிறது.