பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் !

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு ஆயத்தமாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உறுதியளிக்கப்பட்ட மாதாந்த கொடுப்பனவு ஒன்றை இதுவரை வேதனத்துடன் சேர்க்கவில்லை எனக் கூறியே இந்த ஆயத்தம் இடம்பெறுகிறது.

கடந்த வருடம் ஜூலை மாதம் 28 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் இந்த கொடுப்பனவை கோரி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில், இந்த வருடத்தில் இருந்து குறித்த கொடுப்பனவை பெற்று தருவதற்கு அதிகாரிகள் இணங்கியதால் அந்த போராட்டம் நிறைவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

1