தமிழ் மக்களின் பொருளாதாரம் மற்றும் சொத்துக்கள் அழிவடைந்துள்ளன-கவீந்திரன் கோடீஸ்வரன்!

நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக தமிழ் மக்களின் பொருளாதாரம் மற்றும் சொத்துக்கள்

அழிவடைந்துள்ளன.
இதனை நாம் மீளவும் கட்டியெழுப்ப வேண்டியுள்ளதாக அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் அம்பாறை மாவட்டத்தில் சுமார் 20ஆயிரம் வீடுகளுக்கான கேள்வி இருப்பதாகவும் அதனை எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் பெற்றுக் கொடுப்பதற்கான திட்டங்களை வகுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் காயத்திரி கிராமத்தில் இன்று இடம்பெற்ற வீடமைப்பு அதிகார சபையின் மாதிரிக்கிராமம் எனும் வீடமைப்பு தொகுதிக்கான ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.