இந்திய வெளிவிவகார அதிகாரிகள் குழு யாழ் வருகை!

இந்திய வெளிவிவகார அமைச்சின் உயர் மட்ட அதிகாரிகள் குழுவொன்று நேற்று யாழ்பாணத்திற்கு பயணம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

இவர்கள் இந்தியாவின் அனுசரணையுடன் புனரமைக்கப்பட்டு வரும் பலாலி விமானத்தளம், துரையப்பா விளையாட்டரங்கு மற்றும் யாழில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கலாச்சார மண்டபத்தினையும் பார்வையிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் இந்திய வெளிவிவகார அமைச்சின் உயர் மட்ட அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், தற்போது வடக்கு மக்களின் மனங்களில் இயல்புவாழ்க்கை தன்மைகள் பல கேள்விகளாகவே இருந்து கொண்டு வருகின்றது. அவ்வாறான தன்மையினை நாங்கள் காண முடிந்துள்ளதாகவும் அதனை மாற்றி அமைக்க எங்களால் முடிந்த உதவிகளை முன்னேடுப்போம் என்றும் தெரிவித்தார்