வடக்குக் கிழக்கு துண்டிக்கப்பட்டால் கிழக்கு மக்கள் மிகவும் மோசமான நிலை-தர்மலிங்கம் சுரேஸ்!

வடக்குக் கிழக்கு இணைக்கப்படாவிட்டால் கிழக்கு மாகாண மக்கள் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னனி மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 21ஆம் திகதி மட்டக்களப்பில் இடம்பெறவுள்ள எழுக தமிழ் பேரணி குறித்து நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் தெரிவிக்கையில், ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு, சமஷ்டித் தீர்வு இல்லை, வடக்குக் கிழக்கு இணைப்பு இல்லையெனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறிவருகின்றது.

உண்மையிலேயே வடக்குக் கிழக்கு இணைப்புக்காகத்தான் கடந்த 2009ஆம் ஆண்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் மடிந்தனர். வடக்குக் கிழக்கு என்ற ஒன்று இல்லாமலிருந்திருந்தால் 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற பேரழிவைச் சந்தித்திருக்கவேண்டிய தேவையிருந்திருக்காது.

வடக்குக் கிழக்கு துண்டிக்கப்பட்டால் கிழக்கு மக்கள் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்படுவதுடன் வேறு இனங்களால் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்படுவர்.

வடக்குக் கிழக்கு இணைப்பு என்பதும் வடக்கு மக்களை விட கிழக்கு மக்களுக்கே தேவையான ஒன்று எனவும் தெரிவித்துள்ளார்.