வெளிநாட்டு சுற்றுலா பயணி இலங்கை பேருவளை பிரதேசத்தினை கடுமையாக விமர்சனம்!

இலங்கையி்ன் பேருவளை பிரதேசத்தின் நிலை குறித்து வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் கடுமையாக விமர்சனம் முன்வைத்துள்ளார்.

பேருவளை பிரதேச சபையினால் உரிய முறையில் குப்பை அகற்றாமையினால் மக்கொன, பேருவளை மற்றும் அளுத்கம ஆகிய பகுதிகளின் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்தப் பகுதி மக்கள் மாத்திரமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் அந்த பகுதிக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட வெள்ளைக்கார பெண் ஒருவர் சிங்கள மொழியில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இலங்கை மிகவும் அழகான நாடு, எனினும் குப்பையினால் மிகவும் கடினமாக உள்ளது. இந்த பகுதியின் பெயர் தான் அளுத்கம எனினும், இது எனக்கு குப்பபைகமயாக தான் தெரிகின்றது என குறித்த பெண் கோபமாக தெரிவித்துள்ளார்.