மண்டியிடாத தமிழ் வீரம்..!!

அகிம்சை கொண்டு
பேசிய எம்மை..
வன்முறை கொண்டு
அடக்கினாய்
ஆயுதம் கொண்டு
பேச வைத்தாய்..!
ஆயுதம் கொண்டு
பேசிய எம்மை
சுற்றம் சூழல் கூட்டி..
சூழ்ச்சியால் வீழ வைத்தாய்..!
வீழ்ந்துவிட்டது
எம் தேசம் என்றே
நீ.. நேற்று வரை கொக்கரித்தாய்..!
வீரத்தமிழர் பரம்பரையில்
வெற்றிகளும் தோல்விகளும்
சாவுகளும் பிறப்புகளும்
புதிதல்ல.. புரிந்து கொள்…!
நீ
எதை நீட்டுகிறாயோ
அதையே…
தமிழ்த்தாய் புதல்வர்
நாமும்
நீட்டுவோம்..!
வீழ்ந்தது
எம் வீரமும்
மானமும் அல்ல..
தேசம் மட்டுமே.
அதை
மீட்போம்..
உன்னை விரட்டியே..!
இப்போதே..
ஓடு
உன் தேசம் தேடி
தூர ஓடு..!
விடு
எம்மை சுதந்திரமாய்
சொந்த மண்ணில்
வாழ விடு..!
இது நம் தேசம்…!

-அலெக்ஸ் அரவிந்-
07.01.2017