முல்லைத்தீவு மாஞ்சோலை பொது வைத்தியசாலை வளாகத்திற்குள் கட்டாக்காலிகள் அதிகரிப்பு!

முல்லைத்தீவு மாவட்ட மாஞ்சோலை பொது வைத்தியசாலை வளாகத்திற்குள் நடமாடித்திரியும்

கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என சுட்டிக்காட்டப்படுகிறது.

 
மேற்படி வைத்திய சாலை வளாகத்தினுள் கட்டாக்காலிகள் சுதந்திரமாக நடமாடுவதுடன் சிகிச்சைக்காக வரும் நோயாளர்களுக்கும் பணியாற்றும் பணியாளர்களுக்கும் பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்திவருகின்றன.
 
அத்தோடு வைத்தியசாலை சொத்துக்களுக்கும் சேதங்களை விளைவிக்கக்கூடிய ஆபத்தும் காணப்படுகின்றது. எனவே இவ்விடயம் தொடர்பில் உரியவர்கள் கவனமெடுத்து செயற்படவேண்டுமெனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.