ஈழத்தின் பாரம்பரிய கட்டிடங்களைப் பாதுகாக்க உலகவங்கி நிதியுதவி- முதலமைச்சர் விக்னேஸ்வரன்!

தமிழன் வழிகாட்டி செந்தியின் கேள்விக்கு கனடாவில் ஸ்காபுரோவில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் பதில்.

லொறிசெட்க்குள் கூனிக்குறுகி நிற்கும் சங்கிலித்தோப்பு, அஞ்சலி நோட்டீஸ் ஒட்டும் சங்கிலி மனை, ஆடுகள் மேயும் சங்கிலியனின் யமுனா ஏரி, ஓட்டோ ஸ்ரான்டுடன் இருக்கும் சங்கிலியனின் சிலை, புல் பற்றைகள் இனி வளரமுடியாத அளவில் உள்ள கிட்டுப்பூங்கா, தேசிய தலைவரின் வீடு, முப்பது ஆண்டுகள் ஈழ வரலாற்றை எழுதிய இருபதுக்கு மேற்பட்ட மாவீரர் இல்லங்கள், போன்ற வரலாற்று விழுமியங்களை புனரமைத்து பாதுகாத்து வருங்கால சந்ததிக்கு விட்டுச்செல்வதற்கு முதலமைச்சராகிய உங்களிடம் ஏதாவது திட்டங்கள் இருக்கிறதா என்று தமிழன் வழிகாட்டி செந்தியின் கேள்விக்கு கனடாவில் ஸ்காபுரோவில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் வடமாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் பதிலளிக்கையில் உலகவங்கியுடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் தொல்பொருள் ஆராய்ச்சி மையம் பாரிய அளவில் செய்ய இருப்பதாக உறுதியளித்துள்ளார்