படகுகளை கையளிக்காவிட்டால் தற்கொலை செய்வோம்தமிழக மீனவர்கள் எச்சரிக்கை!

ஸ்ரீலங்கா அரசாங்கம் தம்மை விடுதலை செய்யும்போது,

தமது படகுகளையும் தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.தமது படகுகளை கையளிக்காவிட்டால் தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது போன்று தாம்மும் தற்கொலை செய்துகொள்ளவேண்டிய நிலை ஏற்படும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்ரீலங்கா கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 51 பேர் நல்லிணக்கத்தின் அடிப்படையில் நாளை விடுதலை செய்யப்படவுள்ளதாக ஸ்ரீலங்காவிற்கான இந்திய துணை துாதுவர் ஏ.நடராஜன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையிலேயே தாம்மை விடுதலை செய்யும் அரசாங்கம் தமது படகுகளை விடுவிக்குமாறு தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.