எதிர்க்க துணிந்தால் தமிழ் மீளும்.!எதற்கும் துணிந்தால் தமிழ் ஆளும்.!-வ.கௌதமன்!

“தஞ்சையில வெளைஞ்சா தரணியே சாப்பிடலாம் ” என்கிற உண்மை கூற்றை உடைத்தெறிந்த மத்திய

அதிகார வர்க்கமே… உங்களால்தான் இன்று அதே தஞ்சையில் பயிர் காய்ந்து குடிக்க கஞ்சி கூட இல்லாமல் எம் தமிழர்கள் 200 பேருக்கு மேல் தூக்கில் தொங்கியும், விஷமருந்தியும், மாரடைப்பிலும் செத்திருக்கிறார்கள். காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க அறம் தவறியதாலேயே உங்களால் நிகழ்த்தப்பட்டது இத்தனை படுகொலைகள். தொடர்ந்து எங்களின் ஏறு தழுவுதல் விளையாட்டையும் தடை செய்து எங்களோடு கலாச்சார யுத்தம் செய்கிறீர்கள். இதோ புறப்பட்டு விட்டது எங்கள் தமிழர் படை.
மானமுள்ள மாணவ சமுதாயமே… ஐம்பதாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட இந்த பூமிப்பந்தின் ஆதி இனத்தின் உரிமை மீட்க உடனே வீதிக்கு வந்து போராடுங்கள்.
மீண்டும் அதிரட்டும் இந்த தேசம்.
உங்களால் முடியும்
உங்களால் மட்டுமே முடியும்.
எதிர்க்க துணிந்தால் தமிழ் மீளும்
எதற்கும் துணிந்தால் தமிழ் ஆளும்.