காத்திருப்பு..!

கன நேரத்தில் கணமான சுமைகள்
வீணானதா மீண்டும் காலம்
வீண் விரயமாக
கண் முன்னே கடப்பதை
ஒரு கணம் கட்டிபோட முடியாமல்

பாசமும் , நேசமும்
பண்பும் , கருணையும்
கடன் வாங்கியாவது
ஒரு கணம் நிறுத்தி வைக்க
நெஞ்சில் சுமக்கும் சுமைகளை

இறக்கி வைத்து
நிம்மதி மூச்சில் உயிர்த்தெழ
நாளை வரும் புது நாளே
போனவை போகட்டும்
உண்மை வாழ்வு இனி

நிலைக்க வேனிலும்
சுயநலம் மறந்த காலமாய்
பொற்காலம் மலரட்டும்
காத்திருக்கிறேன் ஆவலாய்
கால நேரம் மறந்தவளாய்

மீரா , ஜெர்மனி
08.01.2017