20 ஆயிரம் ரூபா இலஞ்சத்துடன் மாணவனை இணைத்த அதிபர் கைது!

முதலாவது தரத்திற்கு மாணவரொருவரை இணைத்துக்கொள்வதற்காக 20 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்ற அதிபரொருவர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அஹங்கம சாரிபுத்ர வித்தியாலயத்தின் அதிபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பணத்தினை விற்பனை நிலையமொன்றில் செலுத்தி பற்றுசீட்டை தனக்கு கையளிக்குமாறு குறித்த அதிபரால் பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தர்ப்பத்திலேயே அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.